திங்கள், 10 ஜனவரி, 2022

எச்சூழ்நிலையிலும் உத்தமம்

*எச்சூழ்நிலையிலும் உத்தமம்*

by : Eddy Joel Silsbee

 

நாம் உத்தமத்திற்கு வரத்தக்கதாய் தன் மீது தண்டனையை ஏற்றுக்கொண்ட இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

நாம் ஏறெடுக்கும் விண்ணப்பம் நிறைவேறவில்லை என்றறிந்ததும் – தேவனிடம் ஜெபிக்கவே இக்காலத்தில் பலர் யோசிக்கின்றனர்.

 

ஆனால்,

தேவனுக்கு

- ஊழியக்காரனாயிருந்த போதும்,

- தனக்கு என்று ஒரு வாரிசு இல்லாத போதும்,

- வயது சென்று முதிர்ந்த போதும்,

முறுமுறுக்காமல் தொடர்ந்து உத்தமமாய் *கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து*, தேவனுக்கு முன்பாக கணவன் மனைவியான சகரியாவும் எலிசபெத்தும் நீதியுள்ளவர்களாயிருந்தார்கள். (லூக். 1:6)

 

ஏற்றுக்கொள்வது மிக கடினம் என்றாலும்,

நம் வாழ்வில் அனுமதிக்கப்படும் எதுவும்,

தேவனுடைய சித்தம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 

அவருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுப்பதே ஜீவபலி. ரோ.12:1-2

 

அவர்கள் இருவரும் இப்படியாக செயல்பட்டதில் அல்லது தேவன் அனுமதித்ததின் முடிவு நன்மைக்கே என்பதை அறிவோம். 

 

சகலவற்றையும் கர்த்தர் நன்மையாகவே வாய்க்க செய்வார் என்று – அவரிடத்தில் ஒப்புக்கொடுத்து தளராமல் காத்து இருப்போம்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/FZS8dHu-Eqg

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/FyJsZJsPe3C3bfhvEp3IOO

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக