*நிறைவினால் வேஷம் வந்துவிட்டது*
By : Eddy Joel Silsbee
நம்மை நேர்த்தியாய் வழி நடத்தும் நாதர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
அது வேண்டும் இது வேண்டும் என்று நம் தேவைக்காகவே எப்போதும் ஆண்டவரிடத்தில் வேண்டுகிறோம்.
ஆனால், ஞானவான் ஆகூர் தேவனிடம் கேட்ட காரியத்தை நாமும் கவனித்தால் பிரயோஜனமாக இருக்கும்.
தான் மரிக்கும் வரைக்கும் ”இரண்டு காரியம் மறுக்காமல் வேண்டும்” என்று வேண்டினார்.
ஒன்று – பொய்யும் வேஷமும் வேண்டாம்.
இரண்டு – வறுமையும் ஐஸ்வரியமும் வேண்டாம் என்றார்.. (நீதி. 30:7-9)
பலநேரங்களில் எந்த தொல்லையும் இல்லாமல் வாழ்க்கை *திருப்தியாய் இருப்பதால்*
1- தேவபயம்,
2- வசனத்திற்கு கீழ்படிதல் மற்றும்
3- பயபக்தி
போன்றவை *மறந்து விடுகிறது*.
1-தேவனுக்கு முன்பாக நடுங்குவதை மறந்து குதிப்பது;
2-மனம்பதறி ஒரு வார்தையும் பேசாதே என்பதை மறந்து - எவருக்குமே புரியாத வார்த்தைகளை தேவ சமூகத்திலேயே நின்றுக்கொண்டு சுய கற்பனையில் உளறிக்கொட்டுவது;
3-வார்த்தைகளை திரும்ப திரும்ப சொல்வதனால் நான் கேட்பேன் என்று நினைக்காதீர்கள் என்று தேவன் உரக்கச் சொல்லியும் - சொன்ன வார்த்தைகளையே மறுபடியும் மறுபடியும் ஸ்லோகம் போல சொல்வது;
(1நாளா. 16:30, பிர. 5:2, மத். 6:7);
இவையெல்லாம் தவறு என்று வேதம் சொல்லியிருந்தும் தேவ சமூகத்திலேயே துணிகரமாய் செய்து ”பரிசுத்தம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும்” இக்காலகட்டத்தில்;
*கிறிஸ்தவர்கள் வேதத்தை மாத்திரம் பற்றிக்கொண்டிருக்க வேண்டும்*…
ஜீவனுக்கு போகிற வழியைக் கண்டுபிடியுங்கள் !! (மத். 7:14)..
உண்மையைச் சொல்கிறவர்கள் வெகு சிலரே… அவர்களை உலகம் ஒதுக்கத்தான் செய்யும் !!
எவைகளில் எல்லாம் மீறியிருக்கிறோம் என்று ஒருமுறை கூட நம்மை மறுபடியும் சரிபார்த்து ”தேவனுடைய வசனத்திற்கும், அவருக்கும், பயத்தோடும் கீழ்படிதலோடும் சரி செய்து கொள்வோம்”..
பரிபூரணம் அடைகிறதினால் மறுதலிக்காமலும், என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும் என்று ஜெபிப்போம்.
தேவன் நமது வாழ்க்கையை சகல எல்லைகளிலும் பூரணமாய் ஆசீர்வதிப்பார்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி & உலக வேதாகம பள்ளி (USA),
தொடர்பு : +91 81 44 77 6229
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/wuQVfvycfL0
*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக