செவ்வாய், 7 டிசம்பர், 2021

எதிர் வினையும் நன்மைக்கே

*எதிர் வினையும் நன்மைக்கே*

By : Eddy Joel Silsbee

 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

"தடை வந்தால்" அது சாத்தான் மூலமாகவே என்றும்,

"நினைத்தது நடந்தால்" அது தேவ செயல் என்றும்,

நம் மனம் நமக்கு சொல்லிக்கொடுக்கிறது.

 

வானத்திலிருந்து *தேவனுடைய* அக்கினி வந்து

ஆடுகளையும் வேலையாட்களையும்

எரித்துப்போட்டது என்று வேலைக்காரன் சொன்ன போதும்;

 

”பிள்ளைகள் முதற்கொண்டு சகலத்தையும் இழந்து அதோகதியாய் நின்ற வேளையிலும்;

”*கர்த்தருக்கு ஸ்தோத்திரம்*“ என்றார் !! யோபு 1:16

 

வந்த எந்த சூழ்நிலையும் தேவன் அனுமதிக்காமல் நடக்காது என்பதில் அவர் நிச்சயம் கொண்டிருந்தார்.

 

யோபுவின் அந்த பொறுமையை நாம் கற்றுக்கொள்ள பரிசுத்த ஆவியானவரால் நாம் ஊக்கிவிக்கப்படுகிறோம். (யாக். 5:11)

 

எந்த எதிர் வினையும்;

தற்காலம் கஷ்டத்தை கொடுத்தாலும்,

பிற்காலத்தில் தேவனே அதை நமக்கு அனுமதித்தார் என்பதை நாம் உணருவோம் (எபி. 12:11)

 

பொறுமையாய் இருப்போம்...

 

தேவனை மாத்திரமே பற்றிக்கொண்டிருக்கவேண்டும் !!

சகலமும் நன்மைக்கே !!

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி &

உலக வேதாகம பள்ளி (USA),

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/Ci7pnjR0XD4

 

*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/KXlOhZqO589GwgQKkCai6F

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக