*உடல் சுத்தம் பாவத்தைக் கழுவாது*
By : Eddy Joel Silsbee
கிருபையுள்ள தேவன் தாமே நம்மை வழிநடத்துவாராக.
கடவுளை வணங்கும்படி விடியற்காலையிலேயே குளித்து, சரீரத்தை சுத்தம் செய்து, பயபக்தியோடு தங்களை தயார்படுத்துவார்கள் அநேகர்.
நம் கண்களுக்கு சுலபமாக இலகுவாக தெரியும் அழுக்குகளை, சரீரக் கறைகளை சுத்தம் செய்துக் கொள்ள இது வழிவகுக்கிறது...
ஆனால், அகத்தில் உள்ளவையையோ நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது.
தீய எண்ணங்களும், பொறாமைகளும், வெறுப்புகளும், தவறான நோக்கங்களும், உண்மைக்குப் புறம்பானதை சத்தியம் என்றெண்ணிக்கொண்டிருக்கும் தவறான கொள்கைகளும் - கறைகளாக உள்ளத்தில் குடிகொண்டிருப்பதை எப்படி துடைப்பது?
நம்முடைய நற்செய்கைகளும் நல்ல எண்ணமும் நமக்கு சமாதானத்தை கொடுத்தாலும், நாம் செய்த பாவத்திற்கு *அவை ஒருபோதும் மன்னிப்பை பெற்றுத் தராது*.
(தேவவார்த்தைக்கு கீழ்படியாதவரின்) மனிதர்களின் நற்கிரியைகள் கர்த்தருக்கு முன்பதாய், அருவருக்கத்தக்கதாக உள்ளது என்கிறது வேதம். மூல பாஷையில் அருவருப்பு என்ற பதத்தில் வரும் எபிரேய வார்த்தைக்கு இரத்தம் படிந்த மாதவிடாய் துணி என்று அர்த்தம் !! (ஏசா. 64:6)
ஆகவே வசனத்தைக் கேட்டு,
கடவுள் யார் என்பதை அறிந்து,
உணர்ந்து,
ஏற்றுக்கொண்டு,
பாவக்காரியங்களை விட்டு மனந்திரும்பி,
நம்மை முழுவதுமாய் அவருக்கு ஒப்புக்கொடுத்து,
இயேசு கிறிஸ்து சொன்ன கட்டளைக்குக் கீழ்ப்படியும் போது,
*வெளியில் தெரியும் அழுக்கையல்ல இருதயத்தின் அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கிறவர் இயேசு கிறிஸ்து*. 1பேதுரு 3:21, அப். 2:38; 22:16
அதனிமித்தமே நாம் பரலோகம் செல்ல ஏதுவாகிறது. 2பேதுரு 1:11, 1யோ. 5:11
பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தப்படுவோம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி (USA),
தொடர்பு : +91 81 44 77 6229
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/Z3yXiyjjPAw
*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/KXlOhZqO589GwgQKkCai6F
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக