வியாழன், 16 டிசம்பர், 2021

மரியாள் மேன்மையுள்ளவர். ஆனால் கும்பிடப்படுபவரல்ல !!

*மரியாள் மேன்மையுள்ளவர். ஆனால் கும்பிடப்படுபவரல்ல !!*

by : Eddy Joel Silsbee

 

கன்னியாக இருந்தபோது மரியாளின் வயிற்றில் பிறந்த நம் இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

மரியாள் சகல ஸ்திரீகளுக்குள்ளும் ஆசீர்வதிக்கபட்டவரும் தேவனுடைய கிருபையையும் பெற்றவர் - லூக். 1:28

 

விசுவாசமும் தேவ பக்தியும் கொண்டவர்.

சமுதாயத்திற்கு பயப்படாமல், தேவனுக்கு பயந்தவர். லூக்கா 1:38

 

நம்மைப் போல சாதாரண மனிதராய் உலகஜனங்களின் பாவங்களை நீக்கும்படி இயேசு கிறிஸ்து இப்பூமிக்கு வருவதற்கு தன்னை ஒப்புக்கொடுத்தவர் மரியாள். லூக்கா 1:34-35

 

எந்த ஸ்திரீயைக் காட்டிலும் மேன்மையானவர். லூக்கா 1:28

 

இத்தனை கிருபையும் தன்மையும் பெற்ற மரியாள்;

ஒரு போதும் தன்னை கடவுளாகவோ,

இயேசு கிறிஸ்துவுக்கு ஆலோசகராகவோ,

தேவை என்று வருபவர்களுக்காக இயேசுவிடம் சிபாரிசு செய்தாகவோ எவரிடமும் சொன்னதே இல்லை.

வேதத்தில் அதற்கு துளியும் ஆதாரமும்  இல்லை..

 

இதை செய்யலாமே என்று இயேசுவிடம் தாயாகிய மரியாள் கேட்டபோது… *தாய் என்று மறுமொழியாமல் ஸ்திரீயே !! உனக்கும் எனக்கும் என்ன என்று வினவினார்*?  யோவான் 2:3

 

தனது பங்கை புரிந்துக்கொண்ட மரியாள், அங்குள்ள வேலைக்காரரிடம் ”*இயேசு கிறிஸ்து சொல்வதை கேளுங்கள்*” என்று தெளிவாய் சொன்னார். யோவான் 2:5

 

ஒரு தருணத்தில்,

இயேசு கிறிஸ்து உபதேசித்துக்கொண்டிருக்கும் போது “அறைக்கு வெளியே நின்று மற்றவர்களோடு ஒருவராகவே இயேசுவின் வார்த்தைகளைக் கவனித்தவர் மரியாள். மத்தேயு 12:46

 

தான் கடந்து செல்லும் வேளை வந்தபோது,

இப்பூமியில் வருவதற்கு உதவிய, மாம்சத்தின்படி தனது தாயான மரியாளை கவனித்துக்கொள்ள ஒருவர் அவசியம் என்பதை உணர்ந்த இயேசு;

தனது சீஷன் யோவானிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தார். (யோ. 19:26-27) அதாவது, மரியாளை கவனித்துக்கொள்ள ஒருவர் அவசியப்பட்டார் என்பதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும்.

 

மரியாள் புனித தாய்;

பெண்களில் அவர் உன்னதமானவர்;

மேன்மையானவர்;

பெண்களில் சிறந்தவர்;

ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று மரியாளைப் போற்றுகிறவர்கள்… *மரியாளின் வார்த்தைக்கு கீழ்படியவேண்டும். தன்னை வணங்கும்படி அவர் சொல்லாமல், கிறிஸ்து சொல்வதின்படி செய்யுங்கள் என்றார்*.. யோவான் 2:5

 

தேவனுடைய கிருபையை பூரணமாய் பெற்றுக்கொண்டு,  ஆசீர்வதிக்கப்பட்ட கிருபைபெற்ற மரியாளை எவரும் தவறாக புரிந்துக்கொள்ளக்கூடாது.

 

ஆகவே, எவருடைய விசுவாசமும்,

பிரயாசமும் வீணாகாதபடிக்கு

நம்மை போன்ற பாடுள்ள சிருஷ்டியை அல்ல *தேவனையே நோக்கி* நாம் மன்றாட வேண்டும் !!

 

சிருஷ்டியை வணங்குபவர் விக்கிரக ஆராதனைக்காரராவர்.

வைராக்கியத்தினாலும் வீராப்பினாலும் ஒன்றும் நடக்காது.

 

விக்கிரக ஆராதனைக்காரர் எவரும் பரலோகத்தினுள் நுழையமுடியாது என்பதை உயிருள்ள போதே உணர்ந்துக் கொண்டு;

மனந்திரும்பி கிறிஸ்துவின் உபதேசத்திற்கு கீழ்படிந்து;

தேவனை மாத்திரமே வணங்கி;

இரட்சிப்பில் நிலைநின்றால் தங்கள் ஆத்துமாவை நித்திய அழிவிற்கு விலக்கிக்கொள்வர். 1கொரி. 6:9-10

 

நமது ஆத்துமாவை அழிவிலிருந்து காக்க இன்றும் காலமுள்ளது. நேரத்தை வீணடிக்காமல் இரட்சிக்கப்படுவது அவசியம்.

 

தேவன் நம்மீது வைத்த அன்பை நாம் புரிந்துக்கொண்டு துரிதமாய்க் கீழ்படிவோம். அவரது ஆசீர்வாதத்தைப் சுதந்தரித்துக்கொள்வோம்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/YiItgXB-_XI

 

*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக