திங்கள், 13 டிசம்பர், 2021

அந்தரங்க ஊழியத்திற்கு வெளியரங்க பலன்

*அந்தரங்க ஊழியத்திற்கு வெளியரங்க பலன்*

By : Eddy Joel Silsbee

 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

தர்மம் செய்யும் எந்த காரியத்தையும்,

சரீரத்தின் மறுபக்கத்திலிருக்கும் சொந்த கைக்கு கூட அறியாமல் இருக்கவேண்டும் என்றார் ஆண்டவர் (மத். 6:3)

 

அதாவது,

ஒரு கையால் உதவி செய்ததை மறு கையும் பார்த்து விடாதபடி யாருக்கும் தெரியாமல் மறைமுகமாய் செய்ய வேண்டுமாம்.

 

செய்யும் எந்த உதவியோ,

அவசியமென்று நீங்கள் நினைத்துக்கொள்ளும் உங்களது உபவாசமோ, தேவனிடத்தில் ஜெபிக்கும் ஜெபமோ,

தேவனுக்காய் செய்யும் ஊழியமோ,

தாரை தப்பட்டை அடித்து, சுவரொட்டிகள் ஒட்டி, சாலைதோறும் விளம்பர பலகைகளை நாட்டி, தம்பட்டம் அடிக்காமலும் சுய கிரியைகள் எதிவுமே சுயவிளம்பரமில்லாமல் இருக்கவேண்டியது அவசியம் !!

 

தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன். 2கொரி. 10:18

 

பவுல் எழுதும் இந்த வசனத்தை கவனிக்கவும்…

“அப்படியே சிலருடைய நற்கிரியைகளும் வெளியரங்கமாயிருக்கும்; அப்படி இராதவைகளும் மறைந்திருக்கமாட்டாது”. 1தீமோ. 5:25 

 

அப்படியாக செய்யப்பட்ட உண்மையான உதவிக்கு (அல்லது ஊழியத்திற்கு) ஆண்டவர் தாமே வெளியரங்கமாய் பலன் தருகிறார். (மத். 6:4)

 

உன் வாய் அல்ல,

புத்தியானே உன்னைப் புகழட்டும்;

உன் உதடு அல்ல,

அந்நியனே உன்னைப் புகழட்டும். நீதி. 27:2

 

உத்தமமாய் நாம் தேவனது ஊழியத்தை செய்வோம்..

 

அவனவனுடைய கிரியைக்குத்தக்கதாக நிச்சயம் தேவன் பலனளிப்பார். ரோ. 2:6

 

பரலோகத்தின் தேவன் நம் பிரயாசத்தை இன்னும் அதிகமாய் பெலபடுத்தி நம் நற்கிரியைகளை ஆசீர்வதிப்பாராக.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/O-1BKkjmhy8

 

*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக