*கர்த்தருக்கு ஊழியம் செய்வது மேன்மை*
By : Eddy Joel Silsbee
தாகமுள்ளவனுக்கு ஜீவத்தண்ணீரை கொடுக்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
கர்த்தருடைய வார்த்தையை நாம் கேட்பதின் மூலம், அவை நம்மை :
நித்திய ஜீவனுக்குள் நடத்துகிறது;
பாவத்திலிருந்து விடுதலையாக்குகிறது;
வாழ்வின் நம்பிக்கையை கொடுக்கிறது;
தீமையை எதிர்த்து நிற்க நமக்கு பெலன் தருகிறது;
அவருக்கு பிரியமாய் ஓட நம்மை சீராய் நடத்துகிறது;
தேவனுக்கு பிரியமாய் நடப்பது எப்படி என்று கற்று கொடுக்கிறது;
சாபத்திலிருந்து நம்மை விடுவிக்கிறது;
நரகத்திற்கு நம்மை விலக்குகிறது;
இன்னும் அதிகமதிகம் பலன்கள் !!
அவர் வார்த்தையை போதிக்கும்படி கர்த்தரும் தம்முடைய ஊழியக்காரர்களை வற்புறுத்துகிறார் / பலவந்தம் செய்கிறார்.
…. இயேசு நின்று, சத்தமிட்டு(கூறினதாவது): ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். யோ. 7:37
.... ஆயிற்று, நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்(என்றார்). வெளி. 21:6
ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன். வெளி. 22:17
சுய லாபத்திற்காகவோ,
விளம்பரத்திற்காகவோ,
பணம் சம்பாதிப்பதற்காகவோ,
பணி ஓய்வு பெற்றதால் இனி ஊழியம் செய்யலாம் என்றோ,
வேலை கிடைக்காததால் பைபிள் காலேஜ் படித்துவிட்டு ஊழியத்திற்குள் குதிப்பதோ,
குறைந்த சம்பளம் ஆனாலும் ஏதோ நம் குடும்பம் பிழைத்துக்கொள்ளும் என்று ஊழியத்தை செய்வதோ இல்லாமல் - தேவனுடைய வார்த்தையை ருசிபார்த்தவர்களாய் உத்தமமாய் ஊழியம் செய்பவர்களை தேவன் கனம் பண்ணுகிறார்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி & உலக வேதாகம பள்ளி (USA),
தொடர்பு : +91 81 44 77 6229
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/hyCZxX5fyHI
*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக