*தேவனைப் போல….*
By : Eddy Joel Silsbee
உள்ளந்திரியங்களை காணும் தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.
தேவனுடைய முகத்தை பார்க்க வேண்டும் என்று மோசே ஆசைப்பட்டார்.
தேவனோ;
தன் முகத்தையல்ல *தன்மையை* மோசேக்கு வெளிப்படுத்துகிறார். யாத். 33:18-19, 34:6
மனுஷனுக்கு சரீர அலங்காரம், பகட்டு உடுப்பு, கெம்பீர பார்வை இவை எல்லாம் ஜனங்களுக்கு மத்தியில் பிரயோஜனப்படலாம் ஆனால் *தேவன் எதிர்பார்ப்பதோ தன்மையை / தூய்மையான கீழ்ப்படிதலான இருதயத்தையே*.
அவரை போல் ஆகுங்கள் என்று நமக்கு கட்டளை கொடுத்தார். 1பேதுரு 1:16
ஆகவே நாமும் அவரைப் போல இரக்கமும் தயவும் மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையையும் கொண்டிருக்கவேண்டியது. கொலோ. 3:12
வெளி அலங்காரத்தைக் காட்டிலும் உள்ளான அலங்காரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் !!
நாம் மனந்திரும்பும்படிக்கு இன்று வரை அவர் நீடிய பொறுமையோடு இருக்கிறாராம். 2பேதுரு 3:15.
சடிதியில் கோபித்துக் கொண்டு,
*தேவன் கொடுத்த வாழ்க்கையையே பாரமாகவும் கடமைக்காகவும் வாழ்ந்து உதாசீனப்படுத்தி* வைராக்கியத்தோடு மாதங்களை கழிக்கிறவர்கள்,
தாங்கள் ஜெபிக்கவும் வேதம் வாசிக்கவும் உட்காரும் முன்பு இதை சீர்தூக்கி பார்க்க வேண்டும்.
தேவன் நீடிய பொறுமை உள்ளவராம்... *நாம் அந்த நீ.......டிய பொறுமையை* எப்பொழுது கற்றுக் கொள்ளபோகிறோம்?
பொறுமை இருந்தால், இரக்கமும் சமாதானமும் தானாய் வந்து சேரும். யாக். 1:4, 5:11
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +91 8144 77 6229
இப்பதிவின் YouTube லிங்க்: https://youtu.be/iav6fnkKpUI (Watch & Subscribe)
*எங்களது கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/Cyj7n7Q7CRv2GAp7jUOzDk
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக