*சமாதான வாழ்விற்கு என்ன செய்வது?*
By : Eddy Joel Silsbee
ஜீவனுள்ள தேவன் நம்மை நினைத்தருள்வாராக
உலகமும் அதன் ஜீவனமும் எப்போதும் போராட்டம் நிறைந்தது தான். ஆதி. 3:17
நேர்மையாக வாழும்போது உலக ஜனங்களின் பார்வையில் பயித்தியக்காரர்கள் போல் தோன்றுவோம். யோ. 15:19
நம்முடைய ஜீவியம் தேவனுக்கு உகந்ததாகவும்,
அவர் சித்தப்படி செயல்படவும்,
ஜெயம் பெறத்தக்கதாக எந்த இடையூறுமின்றி,
நமது ஜீவனம் சமாதானமாக இருக்கவேண்டுமெனில்;
நம்முடைய மேல் அதிகாரிகளுக்காகவும், அரசாங்கத்திற்காகவும், நிறுவனதிற்காகவும், தேசத்திற்காகவும் ஜெபிக்க வேண்டும். 1தீமோ. 2:2
சபையினர் மத்தியில் நடக்கும் ஜெபகூட்டங்களில் இவைகளுக்காக ஊக்கமாக நீண்ட ஜெபம் செய்வது வழக்கம்.
ஆனால், சொந்த ஜெபத்தில் இவர்களுக்காக ஜெபிக்கிறோமா?
நம் சமாதான வாழ்க்கை கெடுவதற்கு இதுவும் ஒரு காரணம். எரே. 29:7, நெகே. 1:11
அதற்கேற்ற தேவ அநுக்கிரகத்தை பெற நாம் ஜெபிக்கவேண்டியது அவசியம். பிர. 3:12-13
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி & உலக வேதாகம பள்ளி (USA)
தொடர்பு : +91 81 44 77 6229
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/T_oNIJ0yFyU
*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/LgJ6WSm57ovGacvbUc9tow
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக