சனி, 20 நவம்பர், 2021

நானே இராஜா என்று நினைத்தால் தோல்வி நிச்சயம்

*நானே இராஜா என்று நினைத்தால் தோல்வி நிச்சயம்*

By : Eddy Joel Silsbee

 

நம்மை முற்றிலும் பாதுகாக்கும் இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

சுற்றிலும் சதா ஜனக்கூட்டத்துடன் இருப்பவர்களுக்கு, சற்று தனிமையாய் இருக்கவேண்டும் என்று விரும்புவார்கள்.

 

ஆனால், நிர்வாகத்திலும், ஜீவியத்திலும், ஊழியத்திலும், ஆளுகையிலும், அனுதின வாழ்க்கையிலும் தனிமையாய் இருக்க விரும்புவது நல்லதல்ல.

 

பெற்றோர் பிள்ளைகளுக்கு, கணவன் மனைவிக்கு, மூப்பர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் என்று அனைத்து தரப்பிலும் ஒருவரை ஒருவர் தாங்கும் போது பெலம் கூடுகிறது. (பிர. 4:12)

 

ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே. (பிர. 4:9-10)

 

கூடியிருந்தால் மாத்திரமே, நம்முடைய விசுவாச வாழ்க்கையை சாட்சியாக காண்பிக்க முடியும். எபே. 4:3

 

கிறிஸ்தவ அன்பை வெளிப்படுத்த, கூடி இருத்தல் அவசியம். யோ. 13:34

 

தனிக்காட்டு இராஜாவிற்கு, சுயகட்டுபாடோ, வாழ்க்கையின் வெற்றியோ, காரியத்தின் தோல்வியோ, அங்கீகரிப்போ, ஆபத்தில் ஆலோசனையோ, அவசியத்தில் உதவியோ ஒன்றும் கிடைப்பதில்லை. பிரதானமாக தவறுகளிலிருந்து சீர்படுவதற்கான வாய்ப்பும் இல்லாமல் போகும். 1கொரி. 1:10

 

யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே. எபி. 12:14

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி (USA),

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/kFRL4eqJQPQ

 

*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/GxTQqKPQhuuF4bDycL8S17

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக