*கைகளின் கிரியை*
By : Eddy Joel Silsbee
நம் ஜீவிய நாளெல்லாம் நம்மை வழிநடத்தும் தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக.
நாம் இந்த உலகத்தில் செய்யும் எந்த வேலையானாலும், தேவ ஊழியமானாலும், அல்லது இரண்டும் சேர்ந்து செய்தாலும் அவை யாவும் நமக்கு தேவனுடைய அனுக்கிரகத்தாலே மாத்திரமே வந்தது. ஆதி. 2:15, மத். 28:19
மத். 6:24, லூக். 16:13ஐ முன்னிட்டு “தேவ ஊழியம் செய்பவர்கள் உலக வேலை செய்யக்கூடாது” என்று சிலர் சொல்வதை கேட்டிருப்பீர்கள்.
உலக வேலையை ஏதோ சாத்தான் கொடுத்தது போலவும்,
உலக வேலை செய்பவர்கள் சாத்தானுக்கு வேலை செய்வது போலவும் அவர்கள் சித்தரிக்க முனைகிறார்கள்.
வேலையை வாய்க்க செய்வது தேவன்.
வேத கோட்பாடுகளுக்கு உட்பட்டு எது நன்மையானது எது வேதத்திற்கு எதிரானது என்று உணர்ந்து அப்படிப்பட்ட வேலையை தேர்ந்தெடுப்பது மனிதனின் கையில் உள்ளது. ஆதி. 2:17, யாக். 1:14-15, ரோ. 6:16
உத்தமமாய் கிடைத்த வேலையை சந்தோஷத்தோடும், உத்தமத்தோடும், முறுமுறுப்பு இல்லாமலும், தர்க்கிப்பு விவாதம் வாக்குவாதம் இல்லாமலும் செய்யவேண்டும். பிலி. 2:13-16
நம் கைகளின் கிரியையை அவர் ஆசீர்வதிக்கிறார்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +91 8144 77 6229
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/ZRQpIginDbM
*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக