#1114 - *உணர்ச்சிகள் மாறுவதால் பாலினத்தை மாற்றிக்கொள்ளலாமா*? ஆணாக பிறந்தவரது மார்பகங்கள் வளர்ந்து அவர்களின் பெண்மை உணர்ச்சிகளால் பாதிக்கப்பட்டு இம்மாதிரியான மாற்றங்களில் தங்களை மாற்றிக் கொள்ளுகிறார்கள். ஆண்களிற்கான உடைகளை அணிந்தால் அவலட்சணமாகத் தோன்றும். இப்படிப்பட்டவர்கள் பாலினத்தை மாற்றலாமா? விளக்கவும்
*பதில்* : பிறப்பால் ஆணாகவோ அல்லது பெண்ணாக மாத்திரமே இருக்கமுடியும். DNAவில் XX அல்லது XY என்றே இருக்கும்.
அறுவை சிகிட்சை மூலம் தன்னை மாற்று பாலினமாக மாற்றிக்கொள்பவர் உலகிற்கு தன்னை மாற்று பாலினத்தவராக அடையாளப்படுத்திக்கொண்டாலும் உண்மையில் ஆண் அல்லது பெண்ணாகவே இருக்க முடியும்.
எவ்வகையிலும், சரீர உட்கட்டமைப்பை மாற்றிக்கொள்ள இயலாது!
ஒரு ஆண், தன்னை பெண்ணாக மாற்றிக்கொள்வதால் கருத்தரிக்கவும் குழந்தைகளைப் பெறவும் முடியாது. பெண்கள் கருப்பைகள் மற்றும் அனைத்து முட்டைகளும் வாழ்நாள் முழுவதும் பிறக்கும். ஆண் முதிர்ச்சி அடைந்தவுடன் தினமும் விந்தணுக்களை உற்பத்தி செய்யும் விந்தணுக்களுடன் பிறக்கின்றன.
அறுவை சிகிச்சையானது DNA மூலம் கருப்பையை கொடுக்க முடியாது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் அவரை எப்படிப்பட்டவராக ஆக்கினார் என்பதை மறைத்து தனக்கும் உலகத்துக்கும் பொய் சொல்கிறார்.
பொய் சொல்பவருக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார் (வெளி. 21: 8).
ஆகவே, உணர்வுகளையும் தோற்றங்களையும் பொருட்படுத்தாமல், தேவன் நம்மை எவ்வாறு படைத்தார் என்பதை உணர்ந்து அவருக்கு மகிமையாக நாம் வாழவேண்டும்.
மார்பகங்கள் பெரிதாயிருப்பதால், உலகத்திற்கு முன்பு வேஷம் மாற அவசியமில்லை. அழகு என்பது வெளிதோற்றத்தில் இல்லை. அது வஞ்சனையுள்ளது. அது அழிந்துபோகும். நீதி. 31:30
புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள். உபா. 22:5
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
வியாழன், 14 அக்டோபர், 2021
#1114 - உணர்ச்சிகள் மாறுவதால் பாலினத்தை மாற்றிக்கொள்ளலாமா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக