*புதிய பிரமாணத்திற்குள் இருக்கிறோம்*
By : Eddy Joel Silsbee
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
நிறைவானதை கொடுக்கும்படிக்கு குறைவானதை ஆண்டவர் எப்படி உண்டுப்பண்ணியிருக்க முடியும் என்று நியாயப்பிரமாணத்தை குறித்து சிலருக்கு சந்தேகம் உண்டு.
தேவன் கொடுத்த 10 பிரதான கட்டளைகள் மற்றும் 603 உபக்கட்டளைகளையும் (மொத்தம் 613) இஸ்ரவேல் ஜனங்கள் 100 சதமானம் முழுமையாக கீழ்படிந்து அதன்படி வாழ்ந்து காட்ட முடியவில்லை என்பதை நிரூபித்தார்கள். யாக். 2:10
கட்டளைகளை கொடுத்து பல நூற்றாண்டுகள் ஆகியும் அவைகளை மீறாமல் அவர்களில் ஒருவராலும் வாழ்ந்து காட்ட முடியவில்லை.
நியாயபிரமாணத்தை பெற்றுக்கொண்ட நாள் முதல் அவர்கள், தேவனுடைய கட்டளைக்கு முழுமையாக கீழ்படிய *இயலாமல் போனது*.
ஆனால், தான் கொடுத்த நியாயபிரமாணம் பிழையாகவோ, அல்லது
எந்த மனிதனாலும் கடைபிடிக்கமுடியாத அளவிற்கு கடினமானதையோ தேவன் கொடுத்துவிடவில்லை என்பதை நிரூபிக்கும்படியாக கிறிஸ்து உலகத்தில் வந்த நாள் முதற்கொண்டு சிலுவை மரணம் வரை 100% நியாயபிரமாணத்தின்படி வாழ்ந்து காட்டினார். யோ. 18:38, 19:4, 6, மத். 27:18-19, மத். 27:24, லூக்கா 23:4, 14-16, 1பேதுரு 1:19, 2:22-23
மேலும், தான் வாழ்ந்ததில் ஏதாகிலும் குற்றம் இருந்தால் அதை தெரிவிக்கும்படி சவாலும் விடுத்தார். யோ. 18:23
இஸ்ரவேல் ஜனங்களால் நியாயபிரமாணத்தின்படி வாழ முடியாமல் ஏதாவதொரு பாவத்தில் ஈடுபட்டுக்கொண்டே இருந்ததால் அது *அவர்களுக்கு பிழையாக இருந்தது*. எபி. 8:7
ஆகவே, தேவனே மனமிறங்கி அந்த கடினமான கட்டளைகளைக் களைந்து இஸ்ரவேலருக்கென்று பிரத்தியட்சமாய் கொடுத்த கட்டளையை முடிவுக்கு கொண்டுவந்து, முற்றுப்புள்ளி வைத்து, கிறிஸ்துவின் சிலுவையோடு நியாயபிரமாணத்தை காலாவதியாக்கி புதிய பிரமாணத்தை உலக மக்கள் அனைவரும் கீழ்படியும்படி ஏற்படுத்தினார். ரோ. 10:4, எபே. 2:14-18
கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்கு பின்னர்,
நியாயபிரமாணமானது *இஸ்ரவேலருக்கே இல்லையென்று* தீர்த்தபிறகு, இஸ்ரவேலரல்லாத புறஜாதியாராகிய நமக்கு நியாயபிரமாணம் உண்டு என்று அதற்கு கீழ்படிய ஏன் போதிக்கிறார்கள், சாதிக்கறார்கள்?
நியாயபிரமாணம் வேண்டும் என்பவர்கள் சிலுவைக்கு பகைஞர் என்றும், சாபத்தை தங்கள் வாழ்க்கையில் வருவித்துக்கொள்கிறார்கள் என்றும் வேதம் சொல்வதை கவனிக்க தவறக்கூடாது. கலா. 3:10, 11, 2:16, ரோ. 3:19-20, யாக். 2:9-11, பிலி. 3:9-18
ஒருவருக்கொருவர் பட்சித்துக்கொண்டே இல்லாதபடிக்கு புதிய கட்டளைக்கு, புதிய உடன்படிக்கைக்கு, புதிய பிரமாணத்திற்கு, இயேசு கிறிஸ்துவின் கட்டளைக்கு கீழ்படிவோம்! 1யோ. 2:5-11
தேவன் நம்மை சகலவற்றிலும் நேர்த்தியாய் நடத்துகிறவர். அதை நாம் புரிந்து உணர்ந்து அப்படியே நடப்போம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +91 8144 77 6229
இப்பதிவின் YouTube லிங்க்:
*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக