*முறையாக செயல்படாதது சீல் வைக்கப்படும்*
By : Eddy Joel Silsbee
சர்வ வல்ல தேவகுமாரனின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் நிருபத்தில் :
தொழுகை ஒழுங்குகளும்,
தனி நபர் ஒழுக்கமும்,
கர்த்தருடைய பந்தி முறையும்,
சபை ஒழுக்கமும்,
பாடல் பாடும் முறையும்,
காணிக்கை செலுத்தும் முறையும்,
செய்தி கொடுக்கும் முறையும்,
ஆண்கள் மத்தியில் பெண்கள் சபை கூடுகையில் பிரசங்கிக்க அனுமதி மறுக்கப்பட்டிருப்பதையும்,
வித்தியாசமானதும் தனக்கே அர்த்தம் புரியாததுமான வார்த்தைகளால் கூடியிருக்கும் அனைவரும் சப்தமாகவோ கதறியோ ஆராதனை என்று முழங்கலாமா என்பதை குறித்தும் மிகத் தெளிவாக பவுல் வகையறுத்திருக்கிறார்.
ஆனால் இவைகள் கொரிந்தியருக்கு மாத்திரமே என்றும் நம் அனைவருக்கும் அது பொறுந்தாது என்றும் பலர் நினைத்துக்கொள்கிறார்கள் !!
மேலும் பவுல் திருமணம் ஆகாதவர், அவர் சபை போதகரும் அல்ல, ஆகவே நாம் அவைகளுக்கு கீழ்படிய வேண்டியதில்லை என்றும் சொல்கிறார்கள் !!
*தான் அறிந்தது தான் சரி என்ற நினைவில்*;
எழுதப்பட்டிருப்பதை பொறுமையாகவும் முழுமையாகவும் வாசித்து புரிந்து கொள்ள மனமில்லாமல்,
உடனடியாக கருத்து தெரிவிப்பதும்,
தங்கள் கருத்தை பிரதிபலித்தவர்களுடன் கூட்டு சேர்வதும்,
உண்மையை ஏற்க மனமில்லாமல் குழுவை விட்டு வெளியேறுவதுமே மனித குணமாக மாறிப்போனது.
உண்மைக்கு முரணாக வாழ்க்கையில் கடைபிடிக்கும் போது, தேவனே நம்மை பரலோகத்திலிருந்து வெளியேற்றினால் என்ன செய்வது?
ஆகவே, வசனத்தை கவனமாக முழுவதும் படித்தால் நாம் வழிதவறமாட்டோம்.
1கொரி. 1:2ஐ வாசிக்கும்போது இது விளங்கும். *எங்குமுள்ள சபைகளுக்கு எழுதுகிறதாவது* என்று சொல்கிற வாக்கியத்தை மறக்கவேண்டாம்,
மேலும் பவுல் வைக்கும் ஒரு Check பாயின்ட் -> 1கொரி. 14:37 – ஆவியை பெற்றவன் என்று யாரவது தன்னை சொல்லிக்கொண்டால் *இவைகள் எல்லாம் கர்த்தருடையது என்று ஒத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்*..
அங்குமிங்கும் யோசிக்க இடமில்லை.
தேவனுடைய வார்த்தைக்கு சாக்கு போக்கு இல்லாமல் கீழ்படிதல் அவசியம் !!
இல்லையென்றால் நமக்கு நாமே துவங்கி அரசாங்க அங்கீகாரமற்ற (பரலோக அங்கீகாரமற்ற) கம்பெனி நடத்துவது போலாகிவிடும் !!
அரசாங்க சட்டப்படி முறையாக நடத்தப்படாத தொழிற்சாலை அல்லது கம்பெனிகளை அதிகாரிகள் மூடி சீல் வைப்பது போல, நியாயதீர்ப்பின் போது கிறிஸ்துவின் உபதேசத்தின்படி செயல்பட்டிராத எந்த ஆத்துமாவும் அங்கீகாரம் பெறாமல் முழுவதும் நிராகரிக்கப்பட்டு வாழ்நாளின் முழு பிரயாசமும் வீணாகிவிடும் !! மத். 15:13, யோ. 15:2, 6; 1கொரி. 3:12-15
முகஸ்துதி பாராமல் சத்தியத்தில் நிலைநிற்க வேண்டும்.
அவர்கள் அல்ல, நம் செயலுக்கு நாமே கணக்கு ஒப்புவிக்க வேண்டும். 2கொரி. 5:10, எபே. 6:7-8
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EW3WN8aZD9L4sZKFqbLN7M
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
https://youtu.be/80Jy5uJd8WM
*Please Subscribe & Watch* our YouTube Videos
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக