*வாக்குத் தவறாமை*
By : Eddy Joel Silsbee
உன்னதமான தேவனின் நாமத்திற்கு துதிகள் உண்டாவதாக.
ஒரு காரியத்தை சொல்லியும் செய்யாத பட்சத்தில்,
“வெட்கம் ரோஷம் மானம் சூடு சொரனை இருந்தா இப்படி செய்வியா” என்று உலக மக்கள் கேட்பார்கள்..
நாம் என்ன சொல்கிறோமோ அதையே செய்யவேண்டும் என்பது உலக நீதி மாத்திரமல்ல, அது தேவ நீதியாயிருக்கிறது.
சொன்னபடியே செய்கிறவன் பூரண புருஷன் என்று யாக். 3:2ல் பார்க்கிறோம்.
பூரணப்படவேண்டுமென்றால் பொறுமையாய் இருக்கவேண்டும் (யாக். 1:4)
சொல் தவறாதவனை “உத்தமன் & நீதிமான்” என்கிறார் தாவீது. சங். 15:2-4
விளையாட்டிற்கு பேசினாலும் வீராப்புக்காக பேசினாலும் அவை எல்லாவற்றிற்கும் தேவனுக்கு நாம் கணக்கு கொடுக்க வேண்டும். மத். 12:36
சரியோ தவறோ வாயினின்று வெளியேறிய வார்த்தையானது பேசினவனை ஆண்டுகொள்கிறது. யாக். 3:6, நீதி. 13:3, 1பேதுரு 3:10
எந்த வாயாடியும் பாவத்தில் விழுவது நிச்சயம். நீதி. 10:19
தேவபக்தியுள்ளவன் ஒழுக்கமாகவே பேசுகிறான். யாக். 1:26
சொன்ன வார்த்தையை செயல்படுத்தி முடிக்கவேண்டும். தேவனுடைய கட்டளைக்கு அப்படியே கீழ்படியவேண்டும். அப்போது சமாதானம் நம் வசப்படும் !! 2கொரி. 13:11
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EW3WN8aZD9L4sZKFqbLN7M
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
https://youtu.be/_nBmgfIJ9C4
*Please Subscribe & Watch* our YouTube Videos
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக