*பெருந்திரள் கூட்டத்தில் நம் பெயரை கிறிஸ்து உச்சரிக்கட்டும்*
By : Eddy Joel Silsbee
நம்மை நண்பர்கள் என்று அன்பாக அழைக்கும் ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
தானியேல் ராஜகுலத்தில் பிறந்து அடிமையாக வேறொரு நாட்டிற்கு பிடித்து செல்லப்பட்டவர். (தானி. 1: 3,6)
தனது மூன்று நண்பர்களுடன் வேற்றுமத சூழலில், தேவனுக்காக வைராக்கியத்துடன் சமரசமற்ற நிலைப்பாட்டில் வாழ்ந்தார்.
அந்த நிலைபாட்டின் நிமித்தம் தேவன் அவரை பெரிதும் பயன்படுத்தினார். (தானி. 1:8)
நான்கிற்கும் மேற்பட்ட ராஜாக்களிடம் வேலை பார்த்த போதிலும் தன் நிலையை மாற்றிக்கொள்ளவேயில்லை !!
ஒவ்வொருவரும் வேறுபட்ட நம்பிக்கையிலும், வைராக்கியதிலும், சிலை வழிபாட்டிலும், மூட நம்பிக்கைகளிலும் இருந்த போதிலும்; தன் விசுவாசத்திலும் தேவ வைராக்கியத்திலும் எச்சூழ்நிலையிலும் தான் கறைபடாதப்படிக்கு தன்னை தேவனுடைய வார்த்தையின்படி காத்துக்கொண்டார்.
ஏறத்தாழ எழுபது ஆண்டுகளாக பணியாற்றினவர் !!
நம் சூழ்நிலையை காரணம் காட்டி, விசுவாசத்தை விட்டு வழுவிப் போய்விடக் கூடாது.
நாட்கள் மிகவும் பொல்லாதவைகளாய் இருக்கிறது.
சத்தியத்தை நிசாரமாய் விட்டு விடாமல், ஜாக்கிரதையோடு கடைபிடிப்போம் (எபே. 4:15).
எத்தனையோ இக்கட்டுகள் வந்தாலும் பொன்னாக மிணுக்க வேண்டுமெனில் நெருப்பில் புடமிடப்படுவது அவசியம் !! மல். 3:3; 1கொரி. 3:12-13; 1பேதுரு 1:7
அத்தனை கஷ்டங்களையும் கடந்து ஜெயங்கொள்ளும் போது;
நம்மை கவுரவபடுத்தி;
நம் பெயரை கவனமாக ஜீவபுஸ்தகத்தில் பாதுகாத்து,
நம் நண்பரும் ஆண்டவருமாகிய கிறிஸ்து,
சர்வ வல்லவராகிய பிதா முன்பாகவும்,
அனைத்து தூதர்கள் முன்பாகவும்,
நம்முடைய பெயரை *கம்பீரமாக உச்சரித்து கூப்பிடுவதை நம் சொந்த காதுகள் கேட்கும் போது* எந்த துன்பமும் தூசி தான் !!! வெளி. 3:5
அதற்கு பாத்திரவானாக எப்போதும் நடந்து கொள்வோம். !!!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
*Please Subscribe & Watch our YouTube Videos*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக