*சுயகற்பனையில் வைராக்கியம்*
By : Eddy Joel Silsbee
பரிசுத்தராகிய கர்த்தர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
நோவாவின் காலத்தில் வந்த அழிவுக்கு முன்னர் மனுஷன் தோராயமாக 850 ஆண்டுகள் வாழ்ந்தான்.
ஆபிரகாம் காலத்தில் 175, யோசேப்பு 110, சவுல், தாவீது, சாலமோன் காலத்தில் 70 என்று ஆயுள் குறைந்து விட்டது.
வேதாந்தங்கள் பேசி, வைராக்கியம் கொண்டு;
உயிரோடு இருக்கும் இந்த சொற்ப காலத்தில் சொந்த பந்தங்கள், சகோதர சகோதரிகள், கணவன், மனைவி, பிள்ளைகள், உறவினர் மற்றும் சுற்றத்தாரிடம் அன்பாக பழகி பேசத் தெரியாவிட்டால்; செய்யும் ஜெபங்களும், உபவாசங்களும், பிரசங்கங்களும், போதனைகளும் 100% வீண்.
"அன்பு செலுத்த வேண்டும்" என்பதே கிறிஸ்தவத்தின் அர்த்தம் (யோ. 13:34)
பிடித்தவர்களிடம் மாத்திரம் அன்பாய் பேசுவது வேஷம் !! ரோ. 12:9
உண்மையான அன்பு இருதயத்தில் இருந்தால் எவர் மீதும் வெறுப்பு வராது. ஆதி. 30:1
உண்மையான அன்பு இருதயத்தில் இருந்தால் எவரையும் பழி சொல்ல மாட்டார்கள். 2கொரி. 12:20-21
சொந்தக் கற்பனையில் வைராக்கியம் குடிக்கொண்டிருந்தால்; உண்மையை ஏற்றக்கொள்ள மனம்வராமல், தன் வம்சமே சாபத்திற்குள்ளானாலும் பரவாயில்லை என்று நம்மைக் காப்பாற்ற வந்த இயேசுவையே சிலுவையில் ஏற்றிக் கொலை செய்யவைத்துவிடும். மத். 27:17-18, 25
கிரியை இல்லாத விசுவாசம் செத்தது என்ற கட்டளையை உணர்ந்து நாட்களை வீணடித்து விடாதீர்கள்.
இந்தக் குணங்களுடன் பரலோகத்துக்குள்ளே வந்தால் அங்கேயும் பிரச்சனை உருவாக்கலாம் என்பதால் வைராக்கியமும் கோபமும் உள்ளவர்களுக்கு பரலோகக் கதவு திறக்காமலே போகலாம்!! யாக். 2:20, வெளி. 22:15
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
*Please Subscribe & Watch our YouTube Videos*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக