வியாழன், 5 ஆகஸ்ட், 2021

#1109 - ஏதேனுக்கு வெளியே ஆதாமுக்கு முந்தைய மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று ஒரு Bible teaching மிகப் பெரிய அளவில் இன்று வளர்ந்து கொண்டிருக்கிறது. காயீனின் மனைவியும் அப்படிப்பட்டவர்களில் ஒருத்தி என்கிறார்கள். இதை மறுப்பதற்கு நாம் எப்படி பதில் சொல்வது?

#1109 - *ஏதேனுக்கு வெளியே ஆதாமுக்கு முந்தைய மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று ஒரு Bible teaching மிகப் பெரிய அளவில் இன்று வளர்ந்து கொண்டிருக்கிறது. காயீனின் மனைவியும் அப்படிப்பட்டவர்களில் ஒருத்தி என்கிறார்கள். இதை மறுப்பதற்கு நாம் எப்படி பதில் சொல்வது?*

*பதில்* :  ஆதாம் என்பது பெயர் அல்ல. எபிரேயத்தில் அதமாஹ் என்ற எபிரேய வார்த்தைக்கு சிவந்த மண் என்று பொருள். தேவனால் உருவாக்கப்பட்ட முதல் மனிதனை வேதாகமம் ஆதாம் என்றழைக்கிறது. ஆதி. 2:19

தேவன் தன் சொந்தக் கரங்களால் உருவாக்கிய முதல் மனிதனையே மறுக்கிற இவர்கள் வேதத்திற்கு எதிரானவர்களும் தேவனுக்கு விரோதிகள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இவர்கள் அனைவரும் வேத வசனத்தின்படி தங்களுக்கு ஆக்கினையை வருவித்துக்கொள்வது நிச்சயம். “யோவான் 12:47-48 ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்”

இவர்கள் அனைவரும் தங்களது கிறிஸ்துவின் வருகைக்கு முன்னரோ அல்லது ஜீவன் இவ்வுலகிலிருந்து எடுக்கப்படும் முன்போ எப்படியாகிலும் மனந்திரும்புவார்கள் என்பதே நம் ஆவலாயிருக்கட்டும்.

இப்படிப்பட்ட போதனைகள் உலகம் முழுவதிலும் பரவினாலும் வேதம் பொய்யாகிவிடாது. ரோ. 3:3

கி.பி. 365ஆம் ஆண்டிலிருந்தே ஒரு இயக்கம் துவங்கப்பட்டு மதமாக மாறி, அவர்களைத் தொடர்ந்து தினந்தினம் ஒரு பிரிவு புதியதாகத் துளிர்விட்டு இவைகள் அனைத்தும் காட்டுக் கொடியாய் உலகமுழுவதும் படர்ந்து கோடிக்கணக்கான ஜனங்களை அழிவிற்கு நேராக நடத்திக்கொண்டிருந்தாலும் கிறிஸ்தவத்தை ஒருவராலும் அழித்துவிட முடியாது. (“அவனுக்கு உண்டான தேவஉத்தரவு என்ன? பாகாலுக்குமுன்பாக முழங்காற்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாக வைத்தேன் என்பதே. அப்படிப்போல இக்காலத்திலேயும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாயிருக்கிறது” ரோ. 11:4-5)

இப்படிப்பட்டவர்கள் எக்காலத்திலும் மிக அவசியமே. நன்மையான, தரமான, உண்மையான & நேர்த்தியான கிறிஸ்தவர்களைக் கண்டறிய இவர்கள் உதவுபவர்கள். எபி. 1:14ஆம் வசனமே எனக்கு ஞாபகம் வருகிறது.

ஆதாமிற்கும் ஏவாளிற்கும் ஆண் பிள்ளைகள் மாத்திரமல்ல பல பெண் பிள்ளைகளும் பிறந்தார்கள். ஆதி. 5:4

காயீனின் மனைவி அவர்களில் ஒருத்தியாகவே இருக்கவேண்டும். மோசேயின் நியாயபிரமாண காலத்தில் நெருக்கமான உறவினரைத் திருமணம் செய்ய தடைசெய்யப்பட்டது (லேவியராகமம் 18: 6-18).

கேள்விக்கு பதிலாக நேரடியாக சில வசனங்களைக் கீழேப் பதிவிடுகிறேன்.

உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும், சொப்பனக்காரனாகிலும் எழும்பி: நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி, உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாய்ச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும், அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார். உபா. 13:1-3

வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை. ஏசா. 8:20

உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே. 1கொரி. 11:19

உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக. உபா. 8:2

ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார். 2தெச. 2:11-12

நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக. உபா. 6:5

இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், மற்றவர்களுடைய ஜாக்கிரதையைக்கொண்டு, உங்கள் அன்பின் உண்மையைச் சோதிக்கும்பொருட்டே சொல்லுகிறேன். 2கொரி. 8:8

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்,
தொடர்பு : +91 81 44 77 6229

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/

----*----*----*----*----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக