*செவிமடுப்போம்*
by : Eddy Joel Silsbee
பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தமாக்கும் தேவன் நம்மை இன்னும் அதிகமாய் நெறிப்படுத்துவாராக.
பல நேரங்களில், ஏமாத்து வேலையை சாதுர்யம் என்று சொல்லும் அளவிற்கு இரண்டிற்கும் வித்தியாசத்தை அறியாமல் அங்கீகரித்து விடுவதுண்டு.
வயதில் மூத்தவர் சொன்னால் அது நிச்சயம் சரியானதாக தான் இருக்கும் என்றும், இளமையானவர்களின் வாக்கு தவறானது என்றும் கணக்கு போட்டு விடுகிறோம்.
வெளித்தோற்றம் நம்மை ஏமாற்றி விடும். மத். 23:27
நம்முடைய கற்பனைகளும், மனசாட்சியும் கூட நம்மை தவறான பாதையில் இழுத்து விட்டுவிடும். 1தீமோ. 4:1
தீர ஆலோசிக்காமல் விசாரிக்காமல், தனது எண்ணம் எப்போதுமே சரியானது தான் என்ற முடிவுக்கு வந்துவிட்டால் உண்மையை அறியவிடாமல் ஏற்கமனமில்லாமல்; கர்த்தர் நமக்கு ஏற்கனவே கொடுத்திருக்கும் அல்லது கொடுக்கவிருக்கும் ஆசீர்வாதத்தை உதாசீனப்படுத்தி உதறி விட்டு வெளியேறும்படி பிசாசு நம்மை தேவனுக்கு தூரமாக்கி நாசப்படுத்துவான். நீதி. 1:25, 30, 11:14
மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன். நீதி. 12:15
ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போகும்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும். நீதி. 15:22
இனி ஆலோசனையைக் கேளாத கிழவனும் மூடனுமாகிய ராஜாவைப்பார்க்கிலும், ஏழையும் ஞானியுமாகிய இளைஞனே வாசி. பிர. 4:13
வேதம் மாத்திரமே நமக்கு உண்மையை காண்பிக்கும். எபி. 4:12
யதார்த்தத்திற்கு (சத்தியத்திற்கு) செவிசாய்ப்போம். நன்மை வாசற்படியிலேயே இருக்கிறது. 2இரா. 12:9, வெளி. 3:20, யாக். 5:9
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*Q&A-Biblical Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
Website : www.kaniyakulamcoc.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
https://youtu.be/XS98ywdkyaI
*Please Subscribe & Watch our YouTube Videos*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக