வியாழன், 26 ஆகஸ்ட், 2021

தரிசனமல்ல, வசனமே முக்கியம்

*தரிசனமல்ல, வசனமே முக்கியம்*

by : Eddy Joel Silsbee

 

உயிர்தெழுந்த கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

இறந்தவர்கள் கனவில் வந்து எதையாவது சொல்வதாக கவுக் கண்டால் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறவர்கள் உண்டு.

 

அதிலும் வயது முதிர்ந்து இறந்தவர்கள் கனவில் வந்து எதையாவது சொல்லிவிட்டால் அதற்கு மறு பேச்சே இல்லை.

 

ஆனால், எதற்காகவும், எந்த சூழ்நிலையிலும், யார் சொன்னாலும், *இயேசு கிறிஸ்துவின் கட்டளையை மீறக்கூடாது*.

 

எலியாவையும், மோசேயையும் இயேசுவுடன் பார்த்ததும்;

பேதுருவும் யோவானும்,

இயேசுவைக் காட்டிலும் அவர்கள் இருவருமே” இவர்களுக்கு முக்கியமாய் பட்டார்கள்.

 

அந்த க்ஷனத்தில் தானே, பிதாவானவர் வானத்திலிருந்து

“ *இயேசுவுக்கு செவிகொடுங்கள்* ” என்று எச்சரிக்க வேண்டியிருந்தது.  மாற்கு 9:2-7

 

பேதுரு தன் தரிசனத்தைக் குறித்துச் சொல்லும்போது, தரிசனத்தைக் காட்டிலும் வசனமே மேல் என்பதை வலியுறுத்துகிறதைக் கவனியுங்கள்.

 

2பேதுரு 1:17-19 இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம். *அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்*.

 

இயேசுவின் தாயாக இருந்தாலும் சரி,

பாட்டன் முப்பாட்டனாக இருந்தாலும் சரி,

*இயேசுவின் கட்டளை தான் நமக்கு பிரதானம்*.

 

அவரின் கட்டளையை முழுவதுமாக பற்றிக்கொண்டு கடைபிடிப்போம்

 

*சகலத்தையும்* தேவன் நமக்கு ஆசீர்வாதமாக மாற்றுவார்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/LDFydae8QOL2ItKGgYSYXq

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/C3WIe7V7K3M

 

*Please Subscribe & Watch our YouTube Videos*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக