*உயிர்த்தெழுந்த இயேசுவை தைரியமாய் பறைசாற்றுவோம்*
by : Eddy Joel Silsbee
மகத்துவம் நிறைந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
சீல் வைத்து, காவல் காக்கப்பட்ட இயேசுவின் சரீரத்தை, சீஷர்கள் திருடிக்கொண்டு போய்விட்டார்கள் என்பதாக, பரிசேயரும் மூப்பர்களும் ஜோடித்தார்கள். மத். 28:13
மரணத்திற்கு பின்,
மீண்டும் உயிரோடு இயேசுவை நேரில் பார்த்த பின்பும் கூட அப்போஸ்தலர்களுக்கு மன தைரியம் இல்லாமல்,
யூதர்களுக்கு பயந்து அடைந்து கிடந்தார்கள். மாற்கு 16:14, யோ. 20:19
கிறிஸ்துவின் கட்டளைப்படி 50வது நாளான வாரத்தின் முதல் நாளில் (7வார பண்டிகையின் அடுத்த நாள் 7x7+1=50 – லேவி 23:15-21);
12 அப்போஸ்தலர்களுக்கு (120 பேரல்ல-அப் 1:3-4, 8, 26, 2:14, 2:7) பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்ட போதோ,
மூவாயிரம் பேருக்கும் முன்னிலையில் *தைரியமாய், நீங்களே இயேசு கிறிஸ்துவை கொலை செய்தவர்கள்* என்று சாடினார் அப்போஸ்தலனாகிய பேதுரு. அப். 2:23
பரிசுத்த ஆவியானவர் பூமியில் அனுப்பப்பட்டு 2020க்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆகியும் (யோவான் 16:7) தாரும், ஊற்றும், நிரப்பும் என்று ஒவ்வொரு முறை கூடும்போதும் சதா மறுடியும் கேட்டுக்கொண்டே இருப்பதாலேயோ என்னவோ கிறிஸ்துவை, தைரியமாய் வெளியே சொல்ல அநேகருக்கு பயம்.
உங்கள் நிலை எப்படி?
நாம், உயிர்த்தெழுந்த இயேசுவை தைரியமாய் பறை சாற்றுவோம். லூக்கா 24:50-53
பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசமாயிருந்து நம்மை பெலப்படுத்துவார். 1கொரி 3:16
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/LDFydae8QOL2ItKGgYSYXq
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
https://youtu.be/pFIEUmrVAP4
*Please Subscribe & Watch our YouTube Videos*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக