*வேறு வழியேயில்லை* - தினசரி சிந்தனைக்கான வேத துளி, 08 July
by : Eddy Joel Silsbee
நம்மை மீட்டு எடுத்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
ஒரு கட்சிக்காகவோ, அரசியல் வாதிக்காகவோ, ஒரு நல்லவனுக்காகவோ யாராவது தன் உயிரை மாய்த்துக்கொண்டால் அந்த நபரின் குடும்பத்திற்கு வெகுமதியோ நஷ்ட ஈடோ கொடுப்பார்கள்.
ஆனால்,
சுய லாபமின்றி உலக மக்கள் அனைவருக்கும் பாவ மன்னிப்பை கொடுத்தது இயேசுவின் மரணம்.
கடவுள் என்றோ தீர்க்கதரிசி என்றோ தங்களைச் சொல்லிக் கொண்டவர்கள் எவரும் தன் உயிரை உலகத்திற்காக கொடுத்தது இல்லை. மரணத்தை வென்று பரத்துக்கு ஏறிப்போகவும் இல்லை.
அனைவரும் இந்த உலகத்திலேயே மரித்து நியாயதீர்ப்பிற்கென்று கிறிஸ்துவின் வருகைக்காக காத்திருக்கிறவர்கள்.
வானத்தின் கீழெங்கும், இந்த இயேசுவை அல்லாமல் மரணத்தை தழுவிய எவரும் அதே மாம்சத்தில் உயிர்த்து எல்லா கண்களும் பார்க்க பரம் ஏறினதில்லை. (அப். 1:9)
*சகலத்தையும்* ஜெயித்து பரத்தில் பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் அவரே நம் பாவங்களை மன்னிக்கவும் பரலோகம் கொண்டு செல்லவும் வல்லவர். 1பேதுரு 2:6-8
சந்தோஷத்திற்கும் சமாதானத்திற்கும் உத்தம வாழ்க்கைக்கும் உன்னத வாழ்க்கைக்கும் இரட்சிப்பிற்கும் பாவ மன்னிப்பிற்கும் கிறிஸ்துவை தவிர வேறு எந்த வடிகாலும் இல்லை. அப். 4:12
ஆகவே,
சக்திக்கொன்று, விருப்பத்திற்கொன்று, ஆசைக்கொன்று என்று இஷ்டத்திற்கு ஒருவரைப் பற்றிக்கொள்வதல்ல, சர்வவல்லமையுள்ள உலகத்தையும் நம்மையும் படைத்த கடவுளையே நாம் பற்றிக்கொள்வோம்.
பிதாவாகிய தேவனிடம் சென்றடைய இயேசு ஒருவரே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார். யோ.14:6
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
https://youtu.be/rPf7Jn3gHk8
*Please Subscribe & Watch our YouTube Videos*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக