*செயலும் கீழ்படிதலும்* - தினசரி சிந்தனைக்கான வேத துளி, 06 July
by : Eddy Joel Silsbee
நேற்றும் இன்றும் என்றும் மாறாத நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
பலிபீடம் வெடிக்கும் என்று சொன்ன போது வெடித்தது.
மடக்க கூடாத கை மடங்க வேண்டும் என்று வேண்டின போது மடங்கியது. (1இரா. 13:1-6)
இராஜாவினுடைய வீட்டில் பாதி கொடுத்தாலும் வேண்டாம் என்று தேவனுடைய வார்த்தைக்கு பயந்து கீழ்படிந்த மனுஷன்;
வேறொரு தீர்க்கதரிசி வந்து கூப்பிட்டதும் முன்பு தனக்கு சொல்லப்பட்ட தேவ வார்த்தையை மறந்து 2வது தீர்க்கதரிசியின் வாக்கை ஏற்றதால் தண்டனை வந்தது. (1இரா. 13:9-22)
ஒரே ஒரு முறை சொன்னாலும் வேத வாக்கு மாறாது !!
சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி புரிந்து கொண்டாலும்,
தவறுதலாக வழி நடத்தப்பட்டாலும்,
நிச்சயம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
ஒரு கலசம் தண்ணீரும் தன் பலனை பெற்றுக்கொள்ளும் போது, பேசுவதற்கு பதில் மலையை அடித்த மோசேயும் விதிவிலக்கு அல்ல.
நாம் உன்னதமான தேவனை சேவிக்கிறோம்.
நம்முடைய கஷ்டத்திற்கும், உத்தமத்திற்கும் பலன் தராமல் போவதற்கு - மனுஷனால் உண்டாக்கப்பட்ட தெய்வம் அல்ல அவர் !
கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் வார்த்தைக்கு மாத்திரம் செவிசாய்போம்.
அப்போது தலையாகிய கிறிஸ்து,
சரீரமாகிய நம்மை நிச்சயம் நன்மையாகவே நடத்துவார்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக