*நம்மை உயர்த்தாமல் தேவன் யாரை உயர்த்துவார்? - தினசரி சிந்தனைக்கான வேத துளி* 05 July
by : Eddy Joel Silsbee
நம்முடைய பிதாவாகிய தேவன் தாமே நம்மை பெலப்படுத்தி வழிநடத்துவாராக.
ஒரே நாளில் அனைத்து பிள்ளைகளையும் எல்லா சொத்துக்களையும் இழந்து நின்றார் யோபு 1:2-3, 14-19.
இளவரசன் என்ற அஸ்தஸ்தை விட்டு ஆடு மேய்க்க போனார் மோசே. எபி. 11:24-26.
இராஜாங்கத்தை விட்டு விரட்டப்பட்டார் தாவீது. 2சாமு. 15:14-18
அரண்மனையிலிருந்து சிறைக்கும், சிங்க கெபிக்கும் அனுப்பபட்டார் தானியேல். தானி. 6:16
*தேவனை மாத்திரம் பற்றிக்கொண்டு வைராக்கியமாய் இருந்ததாலே*:
எகிப்திய இளவரசன் என்பதைக் காட்டிலும், மாம்சத்தின்படி அடிமையின் பிள்ளையாக தேவன் தெரிந்துகொண்ட இஸ்ரவேலனாய் இருக்க பிரியப்பட்டதாலே மோசேயும்,
விடாப்பிடியாய் தேவனையே சார்ந்து இருந்ததாலே தாவீதும், தானியேலுமாக;
இப்படி பலரது வாழ்க்கை அதி உயரத்தில் போனதை நாம் வேதத்தில் பார்க்கிறோம்.
தற்காலம் கஷ்டமாய் இருந்தாலும், விசுவாசத்தில் வைராக்கியமாய் இருப்போம்.
தேவன் நம்மை உயர்த்தாமல் யாரை உயர்த்தபோகிறார்? (1யோ. 5:5)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக