*கைகளைத் தட்டிக்கொண்டே ஜெபிப்பது?*
நம்மை விசாரிக்கும் பரிசுத்த தேவனின் நாமத்திற்கு சகல துதியும் கனமும் உண்டாவதாக.
காலை எழும் போதும்,
இரவில் படுக்கும் போதும்,
எந்த ஓரு வேலையை துவங்கும் போதும்,
வாகனத்தை ஸ்டார்ட் பண்ணும் போதும்
தேவனை ஒரு முறை நினைத்துக் கொள்கிறோம்.
நமக்கு ஆபத்து வரக்கூடாது, சகலமும் நன்மையாக நடக்கவேண்டும் என்று விரும்புகிறோம்.
அப்பொழுதெல்லாம் அமைதியாக பொறுமையாக மனதினுள் ஜெபிக்கும் ஜெபம் எப்படி கேட்கப்படுகிறது?
மற்றவர்களோடு கூடி இருக்கும் பொழுதோ; அனைவருக்கும் கேட்கவேண்டும் என்ற நோக்கில் சிறிது சப்தத்தை உயர்த்தி ஜெபிக்கிறோம்....
ஆனால், கட்டிடமே அதிரும் அளவிற்கு ஏன் கத்தி கதற வேண்டும்?
அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார் என்று மத். 6:8ல் வாசிக்கிறோமே !!
தேவன் நம்மில் இருக்கிறார்.
இருதயத்தில் வசிக்கிறார்.
நம் சிறிய குமுறலையும் கேட்கும் தேவன்.
முனுமுனுத்தாலும் அறிந்து கொள்கிறார். எரே. 17:10
நம் ஜெபம் தேவனுடைய காதில் கேட்கப்படும்படி;
மணி அடிக்கும்படியோ,
வெடி வைத்து அவரது கவனத்தை திருப்பவோ,
உங்கள் ஜெபம் முன்னுரிமை பெறவேண்டும் என்று உங்கள் கைகளைத் தட்டிக் கொண்டே ஜெபிக்கும்படியோ,
இசைகருவிகளை இசைத்துக்கொண்டே ஜெபிக்கும்படியோ, இராகத்தோடு ஜெபிக்கும்படியோ நமக்கு கட்டளையில்லை !!
உங்களை பெற்ற சொந்த அப்பாவிடமோ அல்லது நீங்கள் வேலை பார்க்கும் கம்பெனி முதலாளியிடமோ உங்கள் கைகளை தட்டிக்கொண்டே உங்களுக்கு வேண்டிய ஒரு காரியத்தை கேட்டுப் பார்த்தால் என்ன பதில் கிடைக்கும்? விரட்டி விடுவார்கள் !!
பூமியிலுள்ள சாதாரண மனிதன் தனக்கு முன் ஒரு காரியத்தை வேண்டுபவர்கள் மரியாதையை செலுத்தவேண்டும் என்று நினைக்கும் போது, சர்வவல்லமையும் படைத்த தேவனுக்கு முன்பாக மரியாதையின்றி நடக்கலாமோ?
அமைதலோடு, பக்தியோடு, பயத்தோடு, பொறுமையாய், முழு இருதயத்தோடு ஜெபித்தால் நிச்சயம் அவருக்கு கேட்கும்.
நமக்கு பதிலும் அவர் சித்தப்படி கிடைக்கும். மத். 6:6
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக