செவ்வாய், 27 ஜூலை, 2021

பெற்றோரின் பொறுப்பு - தினசரி சிந்தனைக்கான வேத துளி

*பெற்றோரின் பொறுப்பு* - தினசரி சிந்தனைக்கான வேத துளி, 27 July

by : Eddy Joel Silsbee

 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

சொந்த முயற்சியில் அல்ல எந்த குழந்தையையும் தேவனே இந்த உலகத்தில் அனுப்பினார் என்பதை மறந்து போகக்கூடாது. (சங். 127:3)

 

அவரிடமிருந்து பெற்றுக் கொண்ட பிள்ளையை,

அவர் பாதையிலே நடத்தி,

அவரிடமே திரும்ப செல்லும்படியாக,

பரிசுத்தமும், நேர்மையுமான வாழ்வை வாழ வழிவகுத்துக்கொடுக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு (உபா. 6:7)

 

கண்டிப்பான பெற்றோராக மாத்திரம் இருந்தால்;

அவ்வீடு ஒரு தொழிற்சாலையை போலவும்,

ஒழுக்கத்தை மாத்திரம் கற்றுக்கொடுத்தால் சிறைச்சாலை போலவும் அவ்வீடு இருக்கும் !!

 

நேரமாகிவிட்டதென்ற கோபத்துடன்,

நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருக்கும் பிள்ளையை காலையில் *துரிதமாய் எழுப்பிவிடுவது* அவர்களின் இருதயத்தை பாதிக்கிறது. நீதி 15:1, 30:33

 

நீண்ட நேரம் இரவில் விழித்திருப்பது சரீரத்திற்கு கேடு. யோ. 11:12

 

சுகமான நித்திரையை தேவனே தருகிறார். சங். 127:2, சங். 4:8

 

போதிய இரவு உறக்கம் இல்லாத பிள்ளைகள் தங்கள் பள்ளி மதிப்பெண்களில் கோட்டை விடுவார்கள் !! நாள்பட்ட இரவு கண்விழிப்பு அனைத்து வியாதியையும் பெற்றுத்தரும். நேரத்தோடு படுக்கைக்கு செல்வதும் நேரத்தோடு காலையில் எழுவதும் ஆரோக்கியம். போதுமான இளைப்பாறுதல் மிகவும் அவசியம். மாற்கு 6:31-32

 

சிட்சிக்க வேண்டியதும் அன்பு செலுத்துவதும் இரண்டுமே அவசியம். ஒன்றை மாத்திரம் பற்றிக்கொண்டால் இரண்டாவதிற்கு இடமிருக்காது. பிள்ளை நேர்த்தியாய் வளராது.

 

பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு கொண்டுவருவது பெற்றோர் பிள்ளைகளுக்கு செய்யும் *உபகாரம் அல்ல….. அது பெற்றோரின் கடமை*.

 

உங்கள் பிள்ளைகள் *திடனற்றுப்போகாதபடி*, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள். கொலோ. 3:21, எபே. 6:4

 

பெற்றோருக்கு பிள்ளைகள் அல்ல; தகப்பனே பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து கொடுக்க வேண்டும்! (2கொரி. 12:14) அப்படிப்பட்டவர்களை வேதம் நல்லவர்கள் என்கிறது. நீதி. 13:22, 19:14.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*                                         

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/LBjBExiWPEg

 

*Please Subscribe & Watch our YouTube Videos*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக