*சரியான ஆயுள் காப்பீட்டை எடுக்கவேண்டும்* - தினசரி சிந்தனைக்கான வேத துளி, 24 July
by : Eddy Joel Silsbee
நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனின் நாமத்திற்கு மகிமையும் கனமும் உண்டாவதாக.
நம்முடைய பிற்கால வாழ்க்கைக்கு தேவையான பொருளோ,
ஆயுள் காப்பீடோ,
சொத்துக்களோ,
தேவையான பணமோ சேர்த்து வைத்து விட்டால் ஒரு மன தைரியமும் திருப்தியும் உண்டாகிறது.
என்ன வந்தாலும் கவலை இல்லை ஆயுள் காப்பீடு உள்ளது என்ற நிம்மதி வந்துவிடுகிறது.
ஆயுள் காப்பீடு என்று அரசாங்கமும் நிறுவனங்களும் அழைத்தாலும், அவைகள் ஆயுளிற்கான காப்பீடு அல்ல… அவைகள் சரீரத்தைக் காத்துக்கொள்ளும் காப்பீடு தான். ”இந்த சரீரத்தில் ஏதாவது குறை ஏற்பட்டால் பிரயோஜனப்படும்”.
*உயிருக்கு என்ன காப்பீடு உள்ளது*?
யார் எவ்வளவு முயற்சி செய்தாலும்,
காற்று வெளியேறாத கண்ணாடி கூண்டிற்குள் அடைந்து உட்கார்ந்து கொண்டாலும் போகும் உயிரை பிடித்து நிறுத்தி வைக்க முடியாது. அதற்கான நேரம் வந்ததும் பறந்து போய்க்கொண்டேயிருக்கும்.
சரீரத்தில் இருந்து பிரிந்து செல்லும் உயிர் எங்கு போக வேண்டும், நல்ல இடத்திற்கோ அல்லது மோசமான இடத்திற்கோ போகவேண்டிய காப்பீட்டை இப்போதே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.. மாற்கு 16:16, அப். 22:16; ரோ. 10:9-14; 1பேதுரு 3:21
*உயிருக்கான காப்பீட்டின் பலன்கள்*:
அது வரை செய்த *அனைத்து வகைக் குற்றங்களும்* அழிக்கப்பட்டு விடுகிறது. அவைகள் எந்தக்காலத்திலும் இனி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. அப். 2:38, சங். 103:12, ஏசா. 38:17
மேலும், பரலோக தேவனான இயேசு கிறிஸ்து நம்மை பொதிந்துக் கொள்கிறார். கலா. 3:27
ஒருவரும் அண்டவிடாமல் முன்பக்கமும் பின்பக்கமும் தலை உச்சியிலிருந்தும் சரீரத்தின் சுற்றுப்புறம் அனைத்தையும் அணைத்துக் கொள்கிறார் தேவன். சங். 139:5
மற்றவர்கள் அடையாளங் கண்டு கொள்ளும்படியாக மேன்மையான வஸ்திரமும் அங்கீகாரமும் கொடுக்கப்படுகிறது. லூக்கா 15:22
தவறான செய்கையிலிருந்து வெளியேறும் மனப்பான்மை கொடுக்கப்படுகிறது. ரோ. 13:14
சத்தியத்தை பற்றிக்கொண்டு தேவனுடைய மகன்களாக மகள்களாக வலம் வருகிறோம். எபே. 4:24
இயேசு கிறிஸ்துவைப் போல நாமும் வாழ ஆரம்பிக்கிறோம். கொலோ. 3:10, 1யோ. 3:2
இப்படிப்பட்ட உன்னதமான *மேன்மையான நேர்த்தியான காப்பீட்டை* எடுக்காவிடில் இன்றே விண்ணப்பிக்கவும் !! மாற்கு 16:16
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
https://youtu.be/NSe3WOp8yOk
*Please Subscribe & Watch our YouTube Videos*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக