*இதயமும் கூடவே வளர்ந்தது* - தினசரி சிந்தனைக்கான வேத துளி, 10 July
by : Eddy Joel Silsbee
சர்வ வல்லவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
நம்முடைய பிறப்பும் இறப்பும் ஒரே ஒரு முறை தான் (எபி. 9:27).
ஏழு ஜென்மம் எடுத்து ஊர் ஊராக சுற்றலாம் என்பதெல்லாம் சுத்தமான கற்பனையே.
சுழற்சி முறையில் எந்த மனிதனும் மறு பிறவி எடுப்பது கிடையாது.
கற்பனைக் கதைகளை நம்பி, தற்போது கொடுக்கப்பட்டுள்ள பொன்னான வாழ்க்கையின் தன்மையைக் இழந்து விடாதீர்கள்.
குழந்தை பருவத்தில் நாம் எப்படி சுத்தமான இருதயத்தோடு இருந்தோமோ, அதே நிலைமையில் கபடமோ, வெறுப்போ, தீமையான எண்ணங்களோ இருதயத்தில் இல்லாமல் வாழுவோம்.
சிறு பிள்ளையாக இருந்த போது;
ஒரு நண்பரிடம் கோபம் வந்தால்,
உடனே “டூ” சொல்லி விட்டாலும்,
அடுத்த பத்து நிமிடத்தில் ”டூவை” மறந்து “பழம்” விட்டு ஒப்பந்தத்தை புதுப்பித்து *வா விளையாடலாம்* என்று சேர்ந்து விளையாடும் தூய்மையான அன்பும் இருதயமும் வயது முதிர்வு அடையும் போது தீய குணங்களும் வளர்ந்து இதயம் இறுகி விட்டது !!
ஆள் வளர்ந்ததும், கள்ளமும் கபடமும் சேர்ந்து வளர்கிறது..
கிறிஸ்தவன் என்று ஊர் நம்பலாம் ஆனால் இதயத்தில் உண்மையாகவே கிறிஸ்தவனா என்பதை தேவன் அறிவார் !!
ஆம், தூய்மையாக கிறிஸ்துவில் நீங்கள் வளர்ந்தீர்கள் என்றால் மனமும் தூய்மையாகவே இருக்கும். மத். 18:3
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
*Please Subscribe & Watch our YouTube Videos*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக