செவ்வாய், 29 ஜூன், 2021

எருசலேம் சுவர் கீழ்படியாமையின் எதிரொலி - தினசரி சிந்தனைக்கான வேத துளி

*எருசலேம் சுவர் கீழ்படியாமையின் எதிரொலி - தினசரி சிந்தனைக்கான வேத துளி* 29 June

by : Eddy Joel Silsbee

 

என்றென்றும் மாறாதவராயிருக்கிற தேவனே உங்களை இந்நாளில் ஆசீர்வதிப்பாராக !

 

எருசலேம் தேவ ஆலயத்தை கட்டிமுடித்த பொழுது, என்னுடைய நாமம் *என்றென்றும் இந்த ஆலயத்தில் இருக்கும்படி இந்த இடத்தை தெரிந்து கொண்டேன்* என்று தேவன் சொன்னார். (2நாளா. 7:16)

 

அதோடு நில்லாமல் ந்நேரத்தில்தானே ஒரு நிபந்தனையும் வந்தது.  

 

தேவனுடைய வார்த்தைக்கான *ஜனங்களின் கீழ்படிதல் தவறும் பட்சத்தில் என் மகிமை எடுக்கப்பட்டு அந்த இடத்தையும் பாழாக்கி சாட்சியாய் நிறுத்துவேன்* என்றார்.  (2நாளா. 7:20)

 

இஸ்ரவேலர்களின் கீழ்ப்படியாமையின் விளைவையே நாம் இக்காலங்களிலும் பார்த்துக்கொண்டு இருக்கும் எருசலேம் தேவாலயத்தின் எஞ்சியிருக்கும் சுவர் Wailing Wall !!!

 

தேவனுக்கு கீழ்படியாமல்,

அந்த சுவரில் போய் நின்று அழுது புரண்டாலும் சுவற்றினுள் கடிதம் எழுதி சுருட்டி வைத்தாலும் பிரயோஜனமில்லை.

 

*அந்த சுவரை பார்க்கும் போது இஸ்ரவேலரின் மீறுதலை தான் நாம் உணர வேண்டும்*. (2நாளா. 7:19-22)

 

தேவன் தம் மகிமையுடன் நம்முடைய வாழ்க்கையிலும் தங்க வேண்டுமெனில், அவருடைய *கட்டளைக்கு கீழ்படிவோம். அதன் படி செயல்படுவோம்*.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443

 

வலைதளம் : www.joelsilsbee.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/Szlg-dvjo7M

 

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக