*எதிரியை திரும்பச்செய்யும் தேவன் - தினசரி சிந்தனைக்கான வேத துளி* 28 June
by : Eddy Joel Silsbee
ஜெயம் கொடுக்கும் தேவனின் நாமத்திற்கு துதியும் கனமும் உண்டாவதாக.
வாழ்க்கையில் முன்னேற நாம் மெதுவாய் நகர,
பகைவனோ வாகனத்தில் பறந்து வந்து தோற்கடிக்கும்படி மிக வேகமாய் வந்தாலும்;
தேவன் அவனுடைய சக்கரம் முதற்கொண்டு சுழல விடாமல் இறுக்கி பிடிப்பாராம் !!
அவரே நம்மை பாதுகாக்கிறவர் என்பதையும்,
எவ்வளவு முயற்சித்தாலும்;
இவனை தாழ்த்தவும் முடியாது வீழ்த்தவும் முடியாது என்று உணர்ந்து அவர்கள் திரும்பி செல்வார்கள்.
வசனம் :
“அவர்களுடைய இரதங்களிலிருந்து உருளைகள் கழலவும், அவர்கள் தங்கள் இரதங்களை வருத்தத்தோடே நடத்தவும் பண்ணினார்; அப்பொழுது எகிப்தியர்: இஸ்ரவேலரைவிட்டு ஓடிப்போவோம், கர்த்தர் அவர்களுக்குத் துணைநின்று எகிப்தியருக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார் என்றார்கள். யாத். 14:25.
தேவன் பாளயத்தில் வந்தார் என்று சொல்லப்பட்டபடியினால், பெலிஸ்தர் பயந்து, ஐயோ, நமக்கு மோசம் வந்தது; இதற்குமுன் ஒருபோதும் இப்படி நடக்கவில்லையே. ஐயோ, அந்த மகத்துவமான தேவர்களின் கைக்கு நம்மைத் தப்புவிப்பவர் யார்? எகிப்தியரைச் சகலவித வாதைகளினாலும் வனாந்தரத்திலே அடித்த தேவர்கள் இவர்கள்தானே என்று 1சாமு. 4:7-8ல் பார்க்கிறோம்.
நாம் கர்த்ரை மாத்திரம் சார்ந்து அவரையே பற்றியிருப்போம்.
இஸ்ரவேலருக்கு துணையாயிருந்தவர் நமக்கும் துணையாய் நின்று நமக்கு எதிரிடையாய் வரும் அனைத்தையும் தானாய் சரியாகும்படி செய்வார்.
2தீமோ. 4:22 கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் (உங்கள்) ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண : https://youtu.be/O5rkSuRVdrE
x

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக