*நம்மில் தாபரிக்கும் தேவத்துவம் - தினசரி சிந்தனைக்கான வேத துளி* 27 June
by : Eddy Joel Silsbee
தம்முடைய பிரசன்னத்தினாலே ஆசீர்வதிக்கும் ஆண்டவரின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
கிறிஸ்துவையும் பிதாவானவரையும் மறந்து பரிசுத்த ஆவியானவரை மாத்திரம் விரட்டிபிடிக்க முயலுபவர்கள் கவனிக்கவேண்டிய பதிவு இன்று.
கிறிஸ்துவை ஏற்றுகொண்டவர்கள் “அனைவருடைய” இருதயத்திலும் பரிசுத்த ஆவியானவர், பிதாவானவர் மற்றும் வார்த்தையானவரும் வாசமாயிருக்கிறனர்.
கிறிஸ்துவானவர் *மகிமையின் நம்பிக்கையாக* நம்மில் இருக்கிறார். கொலோ. 1:27
*உங்களுக்குள் கர்த்தர் இருக்கிறதை* எப்பவாகிலும் சோதித்ததுண்டா? 2கொரி. 13:5
*தேவசமாதானம்* நம் இருதயங்களில் வசிக்கிறது – கொலோ. 3:15
சரீரத்திலே *பரிசுத்த ஆவியானவர் வசிக்கிறார்* – 1கொரி. 6:19
*சத்தியத்தை பின்பற்றுவதன் மூலம் பிதாவானவர்* நம்மில் வசிக்கிறார். 1கொரி. 14:25
பிதாவானவர் நம்மில் இருக்கிறவர். எபே. 4:6
தேவன் தம் சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் நம்மில் உருவாக்குகிறார். பிலி. 2:13
வசனத்தை காதாலேக் கேட்டதாலே ஆவியைப்பெற்றோம் என்கிறது வேதம். கலா. 3:2
விசுவாசத்தினாலே கிறிஸ்துவானவர் நம் இருதயங்களில் வாசமாயிருக்கிறார் – எபே. 3:17, கொலோ. 3:16, எபே. 5:18-19
வார்த்தைகள் மூலமாக நம்மில் இருக்கிறார் தேவன் – யோ. 15:7, சங். 119:11
வேதத்திற்கு மாறாக,
உணர்ச்சிப் பொங்க கேட்கும் வார்த்தைகளினால்,
அஞ்ஞானிகள் போல தலைசுற்றி தரையில் விழும் பழக்கத்திற்கு பலியாகி விடாமல்;
தேவ வார்த்தையை நமக்குத் தந்த பரிசுத்த ஆவியானவர்,
அவர் தந்த வார்த்தையின் மூலம் நம்மில் வசிக்கிறார் என்பதை நினைவில் கொள்வோம். 2தீமோ. 3:16-17
வசனத்தை ஏற்க மனமில்லாமல்;
வாரும் ஆண்டவரே, வாரும் ஆண்டவரே என்று கூப்பிட்டு கூப்பிட்டு சுய சமாதானம் அடைந்து கொள்ளவேண்டாம்.
அவர் ஏற்கனவே நம்மில் இருக்கிறவர்.
கூப்பிட்டதும் வருகிறார் என்று நம்புகிறவர்கள் எப்போது வெளியேறினார் என்று யோசிக்க வேண்டும் !! மத். 18:20
வார்த்தையை கூர்மையாய் கவனித்தால் இன்னும் வளர்ச்சி உண்டு.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண : https://youtu.be/mPzzCUgsYAg

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக