*சோதனை நல்லது - தினசரி சிந்தனைக்கான வேத துளி* 26 June
by : Eddy Joel Silsbee
சகலத்தையும் நன்மையாய் மாற்றுகிற தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சுரங்கத்திலிருந்து தோண்டி எடுத்த தங்கம் / வெள்ளியை தண்ணீரில் கழுவி நேரடியாக அணிந்துக் கொள்ள முடியாது.
அதனுள் இருக்கும் அழுக்கை பிரிக்க வேண்டும்.
தான் வளர்ந்த சூழ்நிலைக்கு ஏற்ப அதன் உருவமும் இருக்கும்.
ஆகவே,
அதை நொறுக்கி, தூளாக்கி, சூடு படுத்தி, அழுக்கை நீக்கி, உருட்டி, நாலாபுறமும் அடித்து, கம்பியாக மெலிசாக நீட்டி, வளைத்து, முறுக்கி, முடிச்சி போட்டு சூடாக்கி பாலிஷ் போட்டபின்னர் விலையேறபெற்ற அலங்காரமான ஆபரணமாகிறது.
அவ்வண்ணமே,
தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து ஞானஸ்நானம் எடுத்ததும் தேவனுக்கும் மற்ற அனைவருக்கும் பிரயோஜனப்படும்படியாய் நம்மை பல கஷ்டங்கள், வேதனைகள், போராட்டங்கள், நெருக்கங்கள், கண்ணீர், துன்பங்கள் போன்றவைகள் வழியாய் நாம் நடத்தப்படுகிறோம்.
ஐயோ கஷ்டம் என்று,
விலகியோடி,
சொந்த சந்தோஷத்தை நாடி ஓடி விடக்கூடாது.
அதனிமித்தம் சொந்த மதிப்பையே இழந்து விடுவோம். நீதி. 17:3, ஏசா. 1:25, மல். 3:3, 2தீமோ. 2:20-21; 1பேதுரு 1:7, எபி. 12:5, எரே. 2:30, நீதி. 3:11
சோர்ந்து போகாமல் விசுவாசத்தில் நிலை நிற்போம்.
தேவன் நம்மை உரிய நேரத்தில் அலங்கரிப்பார். ரோமர் 2:7, கலா. 6:9
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EW3WN8aZD9L4sZKFqbLN7M
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண : https://youtu.be/6P3vPUEUJJQ

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக