வெள்ளி, 25 ஜூன், 2021

நாம் செய்யும் தயவைப் பெருமைப்படுத்தலாகாது

*நாம் செய்யும் தயவைப் பெருமைப்படுத்தலாகாது*

by : Eddy Joel Silsbee

 

நம்முடைய இரட்சகராகிய கர்த்தருடைய நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

அதிகமோ கொஞ்சமோ, நிறைவோ குறைவோ, தேவன் நம்முடைய உள்ளத்தை மாத்திரமே பார்க்கிறவர்.

 

ஒரு போதும் அவருக்கு கொடுக்கும் தொகையை பார்ப்பது கிடையாது. இருதயத்தின் முழுமையை தான் பார்கிறார்.

 

ஒரு ஏழை விதவை *ஒரு துட்டை* காணிக்கையாய் போட்ட பொழுது கொடுத்த தொகையை அல்ல முழுமையான எண்ணத்தையே பாராட்டினார் நம் ஆண்டவர் ... (மாற்கு 12:42)

 

நாம் காணிக்கை கொடுத்தாலும், ஊழியம் செய்தாலும், பிரசங்கித்தாலும், ஏழைகளுக்கு உதவி செய்தாலும், உபசரித்தாலும் -  *மனப்பூர்வமாக செய்வோம்*.

 

கட்டாயத்தின் பேரிலோ, கடமையின் பேரிலோ, விளம்பரப்படுத்தியோ, நான் இவ்வளவு செய்தேன் என்று மற்றவர்களுக்கு படம் எடுத்து அனுப்பினாலோ நீங்கள் செய்த நல்ல காரியத்திற்கு *பரலோகத்திலிருந்து பலன் வராது*.

 

அப்படி செய்பவர்களை வேஷம் போடுகிறவர்கள் அல்லது நடிகர்கள் என்கிறது வேதம். மத். 6:2-3

 

கஷ்டப்படுகிறவர்களை மேற்கோள்காட்டி பணத்தை வசூல் செய்து தனக்கு தேவையானதை ஒதுக்கி மீதியை பகிர்ந்தளித்து,  ஆதாயத்தையும் விளம்பரத்தையும் லாபத்தையும் தேடிக்கொள்பவர்களை தேவன் தள்ளிப்போடுகிறார். மல்கியா 1:13, 1:8, எரே 7:9-10

 

சூழ்நிலையையும் வருமையையும் லாபமாக்காமல் முழு மனதோடும் அன்போடும் விளம்பரமும் ஆதாயமும் இல்லாமல் உதவி செய்வோம்.

 

அதன் பலன் நிச்சயம் பரத்திலிருந்து வரும். மாற்று கருத்தே இல்லை.

 

ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே. எபி. 6:10

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண : https://youtu.be/pMvJ8Y_EKTQ

 

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக