வியாழன், 24 ஜூன், 2021

சாட்சியா வாக்குமூலமா? தினசரி சிந்தனைக்கான வேத துளி

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 24 June

by : Eddy Joel Silsbee

 

நன்மையால் முடிசூட்டுகிற தேவன் உங்களை பெலப்படுத்தி ஆசீர்வதிப்பாராக !

 

சம்பவம் நடந்ததை நேரில் பார்த்தவர்களோ அல்லது கேட்டவர்களோ நீதிமன்றத்தில் வந்து, "ஐயா நான் இதை பார்த்தேன் அல்லது அதை என் காதால் கேட்டேன் என்று சொல்லும் போது நீதிமன்றம் அதை ”சாட்சி” என்று ஏற்றுக்கொள்ளும். சொந்த குடும்பத்தினரோ, நேரடி சம்பந்தப்பட்டவர்களோ சாட்சியாக நிற்க சட்டத்தில் இடமில்லை.

 

*மற்றவர் சம்பந்தப்பட்டதை தான் பார்த்ததாக சொல்வதற்குப் பெயர் சாட்சி”. தனக்கு நடந்ததை தானே சொல்வதற்குப் பெயர் வாக்குமூலம்*.

 

நீதிமன்றத்தில் சாட்சியாக நிறுத்தப்பட்ட ஒருவர்;

நீதிபதியிடம் : நாளைக்கு நான் கேட்கப் போகிறேன் / பார்க்க போகிறேன் என்று கூண்டில் நின்று சொன்னால்; காவல் துறைக்கு கடும் எச்சரிப்பைக் கொடுத்து, சாட்சி சொன்னவனுக்கு அபராதமும் போடுவார் நீதிபதி.

 

உலக நீதியே இப்படியிருக்கும் போது,

பரம நியாதிபதியின் முன்பு (சபையில்) நின்றுகொண்டு,

ன் சுயவாழ்வில் நடந்தவைகளையும்,

இனி நடக்க போகிற விஷயத்தையும்,

சாட்சி என்று சொல்வது அர்த்தமற்றவை !

எ.கா. : வியாதியிலிருந்து சுகம் அடைந்தேன்,

ஊருக்கு போகிறேன்,

புது வேலைக்கு போகிறேன்,

குழந்தைக்கு தேவன் சுகம் கொடுத்தார் போன்றவை.

 

நாளைக்கு ஊருக்கு போகிறேன் / இன்டெர்வ்யூ போகிறேன் ஜெபித்துக்கொள்ளுங்கள் என்று சொல்வது சாட்சி அல்ல அதன் பெயர் ஜெப விண்ணப்பம் !!

 

ஆகவே, சாட்சி என்ற பெயரில் நீதிமன்றத்தை (சபையை) அவமதித்து நம் கணக்கில் அபராதத்தை கூட்டிக்கொள்ளக்கூடாது.

 

அபராதத் தொகை நியாயதீர்ப்பில் காண்பிக்கப்படும் ! 2கொரி 5:10

 

பரம நீதிமன்றத்திற்கு முன்பாக அர்த்தமற்ற செயலில் ஈடுபடாமல், நம் வாழ்க்கையில் மகத்துவமாய் நடந்தவற்ற உற்சாகமாய் மற்றவர்களது விசுவாச வளர்ச்சிக்கென்று வெளிப்படுத்தி, அர்த்தமுடன் தேவனை மகிமைப்படுத்துவோம்.. மத். 5:16

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EW3WN8aZD9L4sZKFqbLN7M

 

வலைதளம் : www.joelsilsbee.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண : https://youtu.be/3NaJDplrWpo

 

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக