*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 22 June
by : Eddy Joel Silsbee
சமாதானத்தின் தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
பெயரளவில் கிறிஸ்தவனாய் வாழ்வது மிகச் சுலபம்.
வேதாகமத்தை எப்போதும் கையில் பிடித்துக்கொண்டு ஸ்தோத்திரம், அல்லேலூயா, ப்ரைஸ் த லார்டு, தேவன் ஆசீர்வதிப்பார் என்றால் மக்களிடையே அங்கீகாரமும் கிடைத்து விடும்.
புற்றீசல் போல் எழும்பியுள்ள காளான் ஊழியர்கள் பெரும்பாலும், இந்த வார்த்தைகளைக் கூட சரியாக உச்சரிக்க அறியாமல் *ஸோத்ரம், ப்ரைஸ் லா* என்றெல்லாம் சொல்வதைக் கேட்க நமக்கு இன்னும் பொறுமை வேண்டும் என்று ஜெபிக்கவேத் தோன்றுகிறது !!
சின்ன விஷயத்தில் கூட நமக்கு பொறுமை இருப்பதில்லை. யாக். 5:8
சட்டென்று கோபம் வந்து விடுகிறது.
வாய்க்கு வந்ததை எல்லாம் கொட்டி தீர்த்து விடுகிறோம்.
கேள்விப்பட்ட சம்பவம் உண்மையா பொய்யா என்று அறியக்கூட நாம் நேரம் எடுத்து கொள்வதில்லை.
எதையாகிலும் விற்றாவது ஒரு கத்தியை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று இயேசு சொன்னதால், ஒரு வேளை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க தானோ என்ற நினைத்து பட்டென்று அந்த மல்கூஸ் காதை கத்தியால் வெட்டிவிட்டார் பேதுரு. ஆனால், அது தவறு என்று உணர்த்தப்பட்டார். யோ. 18:10-11
கோபம் நம் கண்ணையும் புத்தியையும் மறைக்கிறது மாத்திரம் அல்ல, தீமையையும் கொண்டு வருகிறது.
தேவ நீதியை விட்டு நம்மை மாற்றி போட்டுவிடுகிறது. (சங் 37:8, யாக் 1:20)
“தன்“ வார்த்தைக்கு கீழ்படிந்து, தன் அடிச்சுவட்டை கடைபிடிக்க வேண்டும் என்றார் இயேசு கிறிஸ்து. தன் சிலுவை மரணபரியந்தம் பொறுமையாக இருந்தாரே !!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EW3WN8aZD9L4sZKFqbLN7M
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண : https://youtu.be/1kNEjjHkLMM

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக