செவ்வாய், 22 ஜூன், 2021

ஆதி மனிதரையும் இரட்சிக்கும் தேவன் இயேசு - தினசரி சிந்தனைக்கான வேத துளி

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 22 June

by : Eddy Joel Silsbee

 

உன்னதமான தேவ குமாரனாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

இயேசு இவ்வுலகில் வருவதற்கு பல வருஷங்கள் முன்னமே உலகம் இருக்கும் பொழுது, *நீங்க என்ன புதுசா இயேசு மூலமாக தான் பரலோகம் போக முடியும்னு சொல்றீங்க*? என்று சிலர் கேட்டால் – என்ன பதில்?

 

ஆதியிலிருந்து தேவன் தன்னை பின்பற்ற வேண்டும் என்று சொன்ன போது, மனிதன் அதற்கு கீழ்படியாமல் போனதின் விளைவு, தேவனை விட்டு வெகு தூரம் போய்விட்டான் (ஏசாயா 59:2).

 

அவன் விரும்பியும் அவர் அருகே வரமுடியாத அளவிற்கு பாவம் அவனை தடுக்கிறது. ஒவ்வொரு முறையும் தன் பாவத்திற்கு மனிதன் பலி கொடுத்தாலும், உணர்வு இல்லாமல் மீண்டும் மீறினான் (எபிரெயர் 10:11).

 

ஆகவே இயேசுவை கிறிஸ்துவாக இந்த உலகத்தில் பிதாவானவர் அனுப்பி, நமக்காக ஒரே முறையாக பாவநிவாரண பலியாக்கினார் பிதாவாகிய தேவன் (யோவான் 3:16).

 

என்னுடைய குற்றத்திற்காக அவர் தண்டனையை ஏற்றுக்கொண்டாரே என்று உணர்ந்து இயேசுவை கிறிஸ்து என்று நம்பி அவர் வார்த்தைக்கு கீழ்படிந்து அவரை அவர் கட்டளைபடி ஏற்றுக்கொண்டால் மறுபடியும் தவறு செய்யாமல் இருக்க நம் இருதயம் சுட்டிக்காட்டுகிறது (எரேமியா 31:33).

 

தேவன் ஒருவர் தான்.

அவரை சேரக்கூடிய வழியும் ஒன்று தான். (யோவான் 14:6).

அது இயேசு கிறிஸ்து மூலமாக மாத்திரமே.

 

இயேசு வ்வுகில் பிறப்பதற்கு முன்பு உள்ளவர்கள் மீட்கப்பட்டதும் இவர் மூலமே. எபிரேயர் 9:15

 

மேலும் விபரத்திற்கு கேள்வி பதில் எண் #663ஐ வாசித்து தெரிந்துக் கொள்ளவும். அதனுடைய லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr

 

வலைதளம் : www.joelsilsbee.wordpress.com

 

YouTube : https://youtu.be/OGLLQeAsbTY

 

Q&A #663 : https://joelsilsbee.blogspot.com/2019/12/663.html

 



Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக