*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 21 June
by : Eddy Joel Silsbee
சகலத்தையும் நன்மையாக்குகிற தேவக்குமாரனுடைய நாமத்தில் வாழ்த்துக்கள்.
எல்லா மனுஷருக்கும் பிறப்பு ஒன்று தான்.
பூமிக்குரிய மாம்சத்தில் இனி மீண்டும் பிறக்கப் போவது இல்லை.
இப்போது ஒழுங்காக வாழாவிடில் மறுஜென்மத்தில் *பூனையாவோ நாயாகவோ மாறி பிறப்போம் என்பது முழுமையான கற்பனை*.
இத்தனை நூற்றாண்டுகளின் வரலாற்றில்,
எந்தக் குரங்கும் மனுஷனாக மாறி காட்டிலிருந்து வெளியே வரவில்லை. மைனாவோ, கிளியோ, புலியோ, சிங்கமோ, காக்காவோ, கழுகோ, பட்டாம்பூச்சியோ, பாம்போ அல்லது குறைந்தபட்சம் ஒரு ஈயோ தன் இனத்தை மாற்றிக்கொள்ளவும் இல்லை.
நம்மோடு அன்பு பாராட்டி,
தம் சொந்தக் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையே நமக்காக கொடுத்து,
நம்மை தன்னோடு இணைந்திருக்கும்படி அழைத்தவர் *தேவன் மாத்திரமே*. ரோமர் 8:32, 4:25, 5:6-10, யோ. 3:16
அவரே நம்மை *சிரிஷ்டித்ததால்* நம் மீது அன்பு வைத்திருக்கிறார் (ஆதி. 1:27, ரோ. 5:8-10).
ஆனதாலேயே, நாம் தவறு செய்யும் போது நம் கண்ணை குத்துவதோ, நாக்கை அறுப்பதோ, சபிப்பதோ, குடும்பத்தில் சூனியம் வைப்பதோ, சாராயம் கேட்கவோ, காவு வாங்கவோ இல்லாமல்;
மனந்திரும்பும் போது நம்மை *அன்புடன் மன்னிக்கிறார்*. (1 யோவான் 4:10, அப் 22:16, அப் 2:21, ரோ. 10:12-14)
நம்மை முழுவதுமாய் அற்பணித்து வார்த்தைக்கு செவிசாய்த்து பிதாவாகிய தேவனையே தொழுதுகொள்ள வேண்டும். சகல சூழ்நிலையையும் நன்மையாகவும் மேன்மையாகவும் அவர் மாற்றுவார்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக