*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
தம்மை நோக்கி கூப்பிடுகிறவர்களுக்கு செவிசாய்க்கும் ஜீவனுள்ள தேவனின் நாமத்திற்கே எல்லா துதியும் உண்டாவதாக.
நேற்றைய தொடர்ச்சியாக இன்றும் எப்படி ஜெபிப்பது என்கிற தலைப்பில் காண்போம்.
மறுபடியும் சொல்கிறேன்..
ஜெபம் என்பது ஸ்லோகம் அல்ல.
ஜெபம் என்பது சடங்கு அல்ல.
ஜெபம் என்பது வாய்பாடு அல்ல.
ஜெபம் என்பது மந்திரமும் அல்ல..
சில குறிப்புகளும், வசங்கங்களும் கீழே..
*எப்படி ஜெபிப்பது*?
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் (அதிகாரத்தின் படி/கட்டளையின்படி) ஜெபிக்க வேண்டும் (யோ. 14:13)
பிதாவினிடத்தில் ஜெபிக்கிறோம். யோ. 16:23
விசுவாசத்தோடு (நம்பிக்கையோடு) ஜெபிக்க வேண்டும் (மத். 21:22, யாக். 1:6-7)
தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து ஜெபிக்க வேண்டும் (1தெச. 5:17-18)
தூய்மையான உள்ளத்தோடு ஜெபிக்க வேண்டும் (யாக். 4:3)
உறுதியோடு ஜெபிக்க வேண்டும் (ரோ. 12:12)
முரண்டு பிடித்துக்கொண்டு நாம் விரும்பியதை பெற்று விட வேண்டும் என்று ஜெபித்தால் அது பிலேயாமை போல தொல்லையில் வந்து முடியலாம்.
தேவன் தமது சித்தப்படி நமக்கு சகலத்தையும் அவரின் மகிமைக்காக நம்மை ஆசீர்வதிப்பாராக.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக