#1096 - *பழைய ஏற்பாட்டு காலத்தில் எப்படி இந்த வாய்ப்பு நோயாளிக்கு வழங்கப்பட்டது?* ஏனெனில் சில சமயங்களிலே தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கினபின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதிஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான். யோவான் 5:4
*பதில்* : யூதர்கள் மத்தியில் இவ்வாறு ஒரு நம்பிக்கையேயன்றி உண்மையல்ல என்று ஒரு கூட்டத்தார் சொல்கிறார்கள்.
அதற்கு ஆதாரமாகவும் / சார்பாகவும், தற்கால ஆங்கில மொழி பெயர்ப்புகளில் இந்த 4ம் வசனத்தையே காணமுடியாது. 3ம் வசனத்திற்கு பின்னர் 5ம் வசனத்திற்கு தாவியிருப்பதை Good News Bible, NIV, BBE போன்ற மொழிபெயர்ப்புகளைக் கண்டாலே புரியும்.
இந்த நிகழ்வை தள்ளுபடி செய்ய சில குழுவினர் அல்லது மொழி பெயர்பாளர்கள் அல்லது வேத அறிஞர்கள் எனப்படுபவர்கள் முயன்றாலும், ஒரு தூதன் தண்ணீரைத் கலக்கியதாக “சொல்லப்பட்டது” என்று எழுத்தாளர் யோவான் குறிப்பிடாமல், *தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்*என்று அந்த சம்பவத்தை ஊர்ஜிதமாக சொல்லியிருப்பதைக் கவனிக்கவும்.
இந்த பெதஸ்தா குளத்தில் நடந்த குணப்படுத்துதல் சம்பவம் போன்றவை இச்சம்பவத்திற்கு முன்போ அல்லது அதற்கு பின்னரோ மற்ற வரலாற்று ஆவணங்களிலோ அல்லது பழைய / புதிய ஏற்பாட்டு புத்தகங்களிலோ குறிப்பிடப்படவில்லை என்பதால், இது கிறிஸ்துவின் காலத்தில் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இயேசு கிறிஸ்துவின் பாட்டி (மரியாளின் தாயார்) வீட்டிற்கு அருகாமையில் இந்த குளம் உள்ளது. நான் நேரில் காணும் வாய்ப்பும் பெற்றேன். தற்போது அந்தக் குளம் பாழடைந்த ஒரு கிணறு மட்டுமே. அதன் படத்தை உங்களுக்கு பகிர்கிறேன்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
----*----*----*----*----*-----


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக