*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
அனுதினமும் நம்மை ஆசீர்வதிக்கும் தேவனுடைய நாமத்திற்கு எல்லா துதியும் கனமும் உண்டாவதாக.
ஏதோ வாழ்ந்தோம், எதையோ செய்தோம், எப்படியோ வாழ்க்கை ஓடுகிறது என்று நாம் இல்லாதபடிக்கு... தேவன் நம்மை படைத்த நோக்கத்தை முன்னிட்டு உற்சாகத்தோடு ஓடுவோம்.
தேவன் நமக்கு கொடுத்த வாழ்கையை நேசியுங்கள். (எபே. 2:4-5)
கசப்பான வேர் வளராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எபி. 12:15
மேன்மையும் கவுரவமும் இருதயத்தில் ஒட்டிக்கொள்ள துவங்கியதை உணர்ந்தால், அழிவு நம் வீட்டு வாசல் வரை வந்துவிட்டது என்பதை அறிந்து “சடுதியில்” அந்த குணத்தை உதறிபோட்டு விட வேண்டும் – நீதி. 18:12
வியாதியும் வேதனையும் வந்தால், கவுரவத்தையும் வசதியையும் நாமே உதறி போட வேண்டியதாகும் – யோபு 2:8
தேவன் நம்மிடத்தில் எதிர்பார்த்து கொடுத்த, அனுமதித்த வாழ்க்கையை *வாழ* தவறவேண்டாம். எபே. 2:5-6
அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையில் எப்படிப்பட்ட கணவனும்/மனைவியும் அமைந்திருந்தாலும் அதில் நிலைத்திருக்கவேண்டும். அதை மாற்ற முயற்சிக்கக்கூடாது – 1கொரி. 7:1-24
தேவன் நம்மில் எதை எதிர்பார்க்கிறாரோ அதை ஜீவனுள்ள வரை வெளிபடுத்துவோம். எபே. 2:10
சந்தோஷமும் சமாதானமும் நாம் நடந்து கொள்வதை பொருத்தது !!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய வேலைக்காரன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
----*----*----*----*----*
ஞாயிறு, 2 மே, 2021
*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 2 May 2021
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக