வியாழன், 13 மே, 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 13 May 2021

 

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 13 May 2021

by : Eddy Joel Silsbee

 

இரட்சிப்பிற்கென்று அழைத்த ஜீவாதார பலியான கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

அடிமைதனத்திலிருந்த இஸ்ரவேலர்களை சுதந்திர தேசத்திற்கென்று எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தார்.

 

கூக்குரலோடும், அழுகையோடும் வாழ்ந்து வந்த தன் ஜனத்தை சந்தோஷமாக வாழ கானான் தேசத்திற்கு வாக்குறுதி அளித்து எகிப்திலிருந்து வெளியேற்றினார். யாத். 3:7

 

10 விதமான பேரழிவு வாதைகைள் எதிராளிக்கு நேரிட்டதையும், அங்கு இருந்த தங்களை, அவைகளினின்று தேவன் பாதுகாத்ததையும் இஸ்ரவேல் ஜனம் அறிந்திருந்தது. யாத். 8:22-23

 

வாழ்நாள் முழுதும் சம்பாதித்தற்கும் மேலாக, வெள்ளியும் பொன்னும் கால்நடைகளையும் புறப்பட்ட போது சம்பளமாகவும் போனஸாகவும் பெற்றுக்கொண்டார்கள் !! யாத். 12:36, யாத். 3:22

 

ஆனால், முன்பக்கம் சிவந்த சமுத்திரத்தையும், பின்பக்கம் எகிப்தின் படையையும் கண்டதும், இதுவரை கண்ட அதிசயங்களும் ஆசீர்வாதங்கள் அனைத்தும் மறந்து போயிற்று !! யாத். 14:10-12

 

மோசேயோ, தன் விசுவாசத்தில், தேவனைக் கேட்காமலேயே அவர்களை பார்த்து சும்மாயிருங்கள், நின்றுகொண்டிருங்கள். தேவன் நமக்காய் யுத்தம் பண்ணுவார் என்றார். யாத். 14:13-14

 

சும்மா நின்றுகொண்டிருக்கவா உங்களுக்கு இவ்வளவு பெரிய இரட்சிப்பை கொடுத்தேன்? சிவந்த சமுத்திரம் இருந்தால் என்ன,  அடித்துக் கொண்டு போக வேண்டியது தானே என்று மோசேயை தேவன் கேட்டார் !! யாத். 14:15

 

*நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்*?

கஷ்டம் வந்துவிட்டது, சும்மாயிருப்போம் தேவன் யுத்தம் பண்ணுவார் என்று முடிங்கி கிடக்கிறோமா? அல்லது நித்திய ஜீவனுக்கு போகும் பாதையில் சிவந்த சமுத்திரமோ, எரிகோ கோட்டையோ, கன்மலையோ வந்தாலும் முன்னேறிப் போகவேண்டும் என்று முற்படுகிறோமா?

 

விதைவிதைப்பதும் நீர்பாய்ச்சுவதும் நம்வேலை…. பின்னரே தேவன் அதை விளையச்செய்கிறார். செயல்படுவோம்… விளைச்சல் அடைவோம்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 8144 77 6229

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443

 

எமது வலைதளம் : www.joelsilsbee.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக