*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
தாழ்மையின் ரூபமாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
குனியக்குனிய குட்டுவார்கள் என்பது பழமொழி.
அன்னா, காய்பா, சனகரிப் சங்கம், பிலாத்து, ஏரோது பின்னர் முறுபடியும் பிலாத்து என்று விசாரணைக்காக இயேசுவை இங்குமங்கும் அந்த இரவில் துன்புறுத்தி சட்டவிரோதமாக அலைக்கழித்த போது, கிறிஸ்து தன் வல்லமையை காண்பிக்காமல் இருந்தார்.
மேலும் “ஆறு முறை விசாரணை நடத்தியும்”, குற்றம் அகப்படவில்லை என்றபோதும் இயேசுவிற்கு சிலுவையை கொடுத்தார்கள்.
ஏனென்றால், அவரை தண்டித்துவிடவேண்டும் என்ற நோக்கத்திலேயே விசாரணையை நடத்தினார்கள் !!
நம்மை தாழ்த்தும் போது இன்னும் ஓங்கி குட்டுவது உலக இயல்பு.
ஆனால், *தேவ கட்டளைக்கு உடன்பட்டு நம்மை தாழ்த்தும் போது உன்னதத்தில் உட்கார வைப்பது தேவ இயல்பு* !! பிலி. 2:8-9
உலகத்தார் பார்வையில், நியாயம் விசாரிப்பது போல விசாரணையை நடத்திவிட்டு, தான் செய்ய நினைத்ததை நிறைவேற்றுபவர்கள் புத்திசாலி என்று உலகம் சொன்னாலும் *முடிவு தேவனுடைய கையில்*...
தீர்மானங்களை தேவனிடத்தில் விடுவோம். அவரே காரியத்தை வாய்க்க செய்கிறவர்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக