*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
நித்தமும் மாறாத தேவனுக்கே எல்லா மகிமையும் கனமும் உண்டாவதாக.
நம் தேவன் எதை நேற்று கண்டித்தாரோ அதை இன்றும் கண்டிக்கிறவர். நாளையும் நியாயம் தீர்க்கிறவர். எப்போதும் மாறாத தேவன்.
வேதத்தில், புதிய நியமத்தில் சொல்லப்பட்டிராத எந்த செயலும் தேவனுக்கு முரணானவை.
காலப்போக்கில் அந்நிய கிரேக்க தெய்வத்தை ஆங்கில பெயரில் அழைத்து கிறிஸ்துவின் நாமத்தில் ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லத் தொடங்கி, கிறிஸ்தவ மார்க்கம் என்று ஆரம்பித்தவர்கள், கிறிஸ்தவ மதமாகி வேதத்தை விட்டு தூரப்போய்விட்டார்கள்.
தேவனை மறந்து துணிகரமாய் பாவம் செய்து அழிக்கப்பட்ட சோதோம் கொமோரா, அத்மா மற்றும் செபோயிம் பட்டணங்களை மிஞ்சிவிடும் போல இருக்கிறது !! ஆதி. 10:19; உபா. 29:23; ஓசியா 11:8
விக்கிரகத்தை அடிப்படையாக கொண்ட இஷ்தார் பண்டிகை என்று அறிந்தும் ஊர் உலகத்திற்காக கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலாக கொண்டாடுபவர்கள், பாவகளுக்காகவே மரித்த அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்த கிறிஸ்து இயேசுவின் மேல் வைராக்கியம் வைத்து, சத்தியத்திற்கு திரும்பி, வருடத்திற்கு ஒரு நாள் அல்ல வாரந்தோரும் கிறிஸ்துவின் மரணத்தை நினைவுக்கூற திரும்பி வரவேண்டும்.
சட்டையை கிழித்துக்கொண்டு திரள் கூட்டத்திற்கு முரண்பட்ட பவுல்கள் எழும்ப வேண்டிய காலம் இது. அப். 14:14-15
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக