*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
நன்மையான எந்த ஈவையும் நமக்கு பரத்திலிருந்து பிதாவின் மூலம் பெற்றுத்தந்த தேவ குமாரனின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.
மெலித்தா தீவாரின் குணம் நமக்கு ஒரு பாடம்.
சிறை குற்றவாளிகள் என்றும், கைதிகள் என்றும் அறிந்திருந்த போதும் மிக அதிகமாய் அன்பு செலுத்தினார்கள்.. தேவையானவற்றை தாமாக முன்வந்து அவர்களுக்கு உதவி செய்தார்கள். அப். 28:2
ஆனால், பவுலின் கையில் பாம்பை கண்டதும், இந்தக் குணம் சடுதியில் மாறிப் போனது. அப். 28:3-4
பவுலோ பொருட்படுத்தவில்லை. அப். 28:5
மரணம் ஏற்படுவதற்கு பதிலாக, பவுல் சுகமாயிருப்பதைக் கண்ட மாத்திரத்தில் மீண்டும் அதே கூட்டம் அவரை கடவுள் என்று போற்றத் துவங்கியது !! அப். 28:5-6
சுற்றத்தாரையும் சூழ்நிலையையும் பார்த்து சொந்த குணத்தை கெடுத்து கொள்ளக்கூடாது.
திடீரென்று ஊர் மக்கள் போற்றுவார்கள், தூற்றுவார்கள், உயர்த்துவார்கள், தாழ்த்துவார்கள்.
நாமோ, சுயத்தவறுகளை சரிசெய்து, சொந்த உள்ளத்தை சீர்படுத்தி, தேவனுக்கு நேராய் உத்தமத்தை பிடித்து நிற்பதில் உறுதியாய் இருப்போம்.
* *நிச்சயமாக தேவன் நம் நாட்களை ஆசீர்வதிப்பார்* *
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக