வெள்ளி, 2 ஏப்ரல், 2021

தினசரி சிந்தனைக்கான வேத துளி 2 Apr 2021

தினசரி சிந்தனைக்கான வேத துளி
by : Eddy Joel Silsbee

நம்மை பரிசுத்தப்படுத்தும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

பித்தளையும் இரும்பும் ஒரு காலத்திலும் சேராது. அவைகளை நாங்கள் ஒன்று சேர்த்துவிட்டோம் என்று எந்த மந்திரவாதி சொன்னாலும் அது வெறும் ஏமாத்து வேலை.

அது போல, தன் சொந்த கற்பனைகளையும் கொள்கைகளையும்  விட்டு முழுவதுமாய் புதிய ஏற்பாட்டு சத்தியத்திற்கு மாறினாலேயன்றி எப்போதும் ஒருகாலத்திலும் கிறிஸ்துவின் சரீரத்தோடு ஐக்கியமாக இருக்க முடியாது.

சட்டத்தை மீறுதல் என்ற பாவம் இருந்தால், தானாகவே பிதாவின் பிரசன்னத்தை இழந்து விடுவோம் !!  (ஏசா. 59:2)

ஆகவே, ஆணித்தரமான, கூர்மையான வார்த்தைகளை ஜீரணிக்க முடியாமல், சதா ஆசீர்வாதம், நன்மை, ஆரோக்கியம், நிறைவு, சமாதானம், சுகம் என்று தன் மந்தையை கேமாமாவிலேயே வைத்து சுய லாபம் ஈட்டும் கிறிஸ்தவ மந்திரவாதிகளையும் குடுகுடுப்பைக்காரர்களையும் நம்பி பரம இரட்சிப்பை இழந்து விடவேண்டாம்.

கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு கீழ்படிவோம்..

அப்பொழுது, உண்மையாகவே தேவன் நம்மோடு துணையாக எப்போதும் இருந்து சகலவற்றையும் நன்மையாக்குவார். மத். 6:33

எடி ஜோயல் சில்ஸ்பி
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229

Q&A Biblical Book ஆர்டர் செய்ய :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக