*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
திக்கற்றவர்களை விசாரிக்கும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
தான் செய்யும் அனைத்து நல்ல காரியங்களையும், தேவக்கட்டளைப்படி செய்யும் செயல்களையும்,
நியாயபிரமாணத்தின்படி செய்யும் நியாயமான காரியங்களையும், நேர்த்தியாய் கடைப்பிடித்துக்கொண்டு தேவ மனிதனாய் தான் வாழ்ந்து வருவதை மனதில் தாங்கி, நினைவில் வைத்து, தேவாலயத்தில் வந்து தன் உரிமையை ஆசீர்வாதமாக கிடைக்கவேண்டும் என்று பட்டியலிட்டு தேவனிடத்தில் கேட்ட பரிசேயனை தேவன் கண்நோக்காமல்;
ஐயோ நான் எதற்குமே தகுதியில்லாத பாவி என்று தன்னை தாழ்த்தினவனே தேவனிடத்தில் கிருபை பெற்றான். (லூக். 18:9-14)
தேவன் நேர்த்தியை விரும்புகிறவர்.
அதே நேரத்தில், தாழ்மையையும், அன்பையும் “நாம்” கொண்டிருக்க வேண்டியது அவசியம்.
நம்முடைய நேர்த்தியான செயல்பாடுகள் தேவனிடத்தில் பாராட்டை ஈற்று தருவதை விட, தாழ்மையே முந்தி கொள்ளும்.
ஐந்து படிகளை தொழுகையில் சரியாக கடைபிடித்து,
வாரம் தவறாமல், வாரத்தின் முதல் நாளில் நேர்த்தியாய் தேவனைத் தொழுகிறோம் என்று எபிரேயர் 10:25ஐ எப்போதும் மற்றவர்களுக்கு சவால் விட்டு பரிசேய கிறிஸ்தவனாக மாறிவிடாமல்,
அவ்வசனத்தின் துவக்கத்தில் சொல்லப்பட்டவைகளை (வ24) மறந்தால் நமக்கும் வெறுமையே மிஞ்சும்.
கிறிஸ்தவர்களாகிய நாம் கவனமாக செயல்படவேண்டியுள்ளது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக