*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
சபைக்கு தலையாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
புதிய பிரமாண காலத்தில் இருக்கிறோம்.
மணி அடித்து அழைக்கும் கட்டிடமோ,
கொட்டு அடித்து கூப்பிடும் கூடாரமோ,
அலங்கரித்து உயர்ந்த வடிவமைப்பில் கரையோரத்தில் நின்று கொண்டு இருக்கும் கட்டிடத்தையோ,
“சபை” என்று வேதம் சொல்லவில்லை.
அவையெல்லாம் சபை *கட்டிடங்கள்* தான்.
கடவுள் அதனுள்ளேயே தங்கி இருப்பதில்லை !! (அப். 17:24)
பிரசங்க மேடை அருகே நின்று ஜெபித்தால் தேவனுடைய காதுகளில் சீக்கிரமாக விழுந்து விடுவது போல நம்பிக்கொண்டு இருப்பது 2000 வருடங்களுக்கு முன்னரே எடுக்கப்பட்டு போனது.
இன்னமும் அதையே நம்பிக்கொண்டு நாட்களை வீணடிக்க வேண்டாம். எங்கும் தொழுது கொள்ளும் காலத்தில் நாம் வாழுகிறோம். யோ.4:21
இரட்சிக்கப்பட்ட நாமே தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம். 1கொரி. 3:16
அவர் வியாபித்து இருப்பது நம் சரீரத்தில் மற்றும் அவருடைய கட்டளையின்படி கிறிஸ்தவர்கள் ஒன்று கூடும் இடத்தில் அவர் பிரசன்னாமாகிறவர். மத். 18:20
இரட்சிக்கப்படுகிறவர்களை கர்த்தர் அனுதினமும் தன் சரீரமாகிய சபையில் சேர்த்தார். அப். 2:47. இங்கு சபை என்பது “கிறிஸ்துவின் சரீரத்தை” குறிக்கிறது.
இரட்சிக்கப்படுகிறவர்கள் கர்த்தரின் சரீரத்தில் அங்கங்களாக சேர்க்கப்பட்டு வருகிறோம். எபே. 4:16, 25, 5:30
ஒரே சபை ! ஒரே ஞானஸ்நானம் ! எல்லாம் ஓகே ஓகே என்று தலையாட்டிக்கொண்டாலும், மேடை வியாபாரிகளின் வார்த்தை ஜாலத்திற்கு விழுந்து, தண்ணீர் ஞானஸ்நானம் மாத்திரம் போதாது இன்னுமொரு ஞானஸ்நானமும் பெற காத்து, அக்கினியால் அழிவைத் தேடக்கூடாது. மத். 3:11-12
காலை ஒரு சபை, மாலை ஒரு சபை, குடும்ப சபை, ஆதி சபை, ஆவிக்குரிய சபை, ஆவியில்லாத சபை என்று பட்டியல் நீளுகிறது…
எவ்வளவு பரிதாபகரமான நிலமையில் இன்றைய கிறிஸ்தவ மதம் ??
கிறிஸ்தவ மார்க்கத்திற்கு திரும்புவோம்.
கிறிஸ்துவின் சரீரத்தில் அங்கமாய் இருக்கிறீர்களா என்பதை ஊர்ஜீத படுத்திக்கொள்ளவும். (ரோமர் 16:16)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக