வியாழன், 15 ஏப்ரல், 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 15 April 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*

by : Eddy Joel Silsbee

 

மன்னிப்பின் சிகரமாகிய இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

கையும் மெய்யுமாய் பிடிக்கப்பட்ட பெண்ணை ஊரெல்லாம் குற்றபடுத்தியபோது, இயேசு கிறிஸ்துவானவர், அவளை பார்த்து; “போ, *இனி பாவம் செய்யாதே*” என்றார். (யோ. 8:11)

 

38 வருஷமாய் வியாதியாய் இருந்தவனை இயேசு கிறிஸ்து குணமாக்கியதும், கேடு ஒன்றும் வராதிருக்க, “*இனி பாவம் செய்யாதே*” என்றார். (யோ. 5:14)

 

தன்னையே தெரியாது என சத்தியம் செய்யப்போகிறார் என்றறிந்தும், பேதுருவை பார்த்து “*நீ திடன்கொண்டபின் என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்*” இயேசு கிறிஸ்து... (லூக். 22:32)

 

ஆம்..

தவறை சுட்டிக்காட்டி, குற்றஞ்சாட்டுவது தேவனுக்குரிய தன்மை அல்ல… *மேற்கொண்டு அதை நினையாமலிருப்பது அவருடைய சுபாவம்*.

 

திருந்திய பின்னரும், பழைய தவறுகளை எப்போதும் சுட்டிக்காட்டி குற்றப்படுத்துவதும், நினைவுகூர்வதும் பிசாசின் செயல் -வெளி. 12:10

 

நாமோ, கிறிஸ்துவின் அடிச்சுவட்டையே பின்பற்றுவோம்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,

+91 8144 77 6229

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443   

 

*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :

https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக