புதன், 14 ஏப்ரல், 2021

# 1093 – ஞானஸ்நானம் எடுக்கும் போது பாவமன்னிப்பிற்கென்று எடுக்கவேண்டும் என்று எனக்கு தெரியாது. அப்படியென்றால் மறுபடியும் எடுக்கவேண்டுமா? ஒரே ஞானஸ்நானம் என்று வேதம் சொல்லியிருக்க நான் மீண்டும் எடுத்தால் அது இரண்டாவது ஞானஸ்நானம் என்றாகிவிடுமல்லவா?

#1093 – *ஞானஸ்நானம் எடுக்கும் போது பாவமன்னிப்பிற்கென்று எடுக்கவேண்டும் என்று எனக்கு தெரியாது. அப்படியென்றால் மறுபடியும் எடுக்கவேண்டுமா? ஒரே ஞானஸ்நானம் என்று வேதம் சொல்லியிருக்க நான் மீண்டும் எடுத்தால் அது இரண்டாவது ஞானஸ்நானம் என்றாகிவிடுமல்லவா*?

*பதில்* : யோவான் ஸ்நானன் மனந்திரும்புதலுக்கென்று ஞானஸ்நானம் கொடுத்தார். அப். 19:4, மாற்கு 1:4

பாவமன்னிப்புண்டாகும்படி இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சிந்தப்பட்டது. மத். 26:28, லூக்கா 1:77, அப். 5:31

சுவிசேஷம் என்பது கிறிஸ்துவின் மரணம், அடக்கம் & உயிர்த்தெழுதல். 1கொரி. 15:3-4

பாவமன்னிப்புண்டாகும்படி சிந்தப்பட்ட (பாவநிவாரணமாக பலியிடப்பட்ட) கிறிஸ்துவின் அந்த சிலுவை மரணத்திற்கு ஒப்பாக இருக்கும் சுவிசேஷத்திற்கு கீழ்படிவது ஞானஸ்நானத்தில் வெளிப்படுகிறது. பாவத்திற்கு மரித்து, தண்ணீரில் அடக்கம் செய்யப்பட்டு, நீரில் இருந்து வெளியேற வேண்டும் (உயிர்த்தெழுதலுக்கு சமானம்). ரோ. 6:3-5

அப்பொழுது பழையவைகள் ஒழிந்து புதிய சிருஷ்டியாக்கப்படுகிறோம். 2கொரி. 5:17

இயேசுவே “கிறிஸ்து” என்று அறியாவிடில் விசுவாசத்தை அறியவில்லை. ஆகவே, விசுவாசம் இல்லாமல் எடுத்த ஸ்நானத்தை ஞானஸ்நானத்திற்கு ஒப்பிடமுடியாது.  இயேசு தேவனுடைய குமாரன் என்று நம்புவதே விசுவாசம். அப்.8:37-38

இயேசு தான் கிறிஸ்து என்றும், செய்தது தவறு என்பதை உணர்ந்து பெந்தெகொஸ்தே என்ற யூதப்பண்டிகை நாளில், கிறிஸ்துவின் இராஜ்யமான சபை ஸ்தாபிக்கப்பட்டபொழுது, பேதுருவை பார்த்து, இப்பொழுது நாங்கள் என்ன செய்வது என்று கேட்டவர்களிடம், பாவமன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம் எடுக்கச்சொன்னார். அப். 2:38.

இயேசு தான் கிறிஸ்து என்ற சத்தியத்தை அறிந்த பின்னர், பாவங்கள் போக கழுவப்படு என்று சவுலாகிய பவுலைப் பார்த்து அனனியா சொன்னார். அப். 22:7-16

சத்தியத்தை அறிந்ததும், இரட்சிக்கப்பட நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்ட சிறைச்சாலை அதிகாரி ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார். அப். 16:31-34

ஆகவே, இயேசுவானவர் யார், ஏன் மரித்தார், ஏன் அடக்கம் செய்யப்பட்டார், ஏன் உயிர்த்தெழுந்தார், எப்படி இரட்சிப்பு வருகிறது என்ற எந்த அடிப்படை உபதேசமும் அறியாமல் எடுத்துக்கொள்ளும் எதையும் ஞானஸ்நானம் என்று எப்படி கணக்கில் கொள்ளப்படும்? இதில் குழுந்தை ஞானஸ்நானமும் எடுபட்டு போகிறது.

விசுவாசம் வந்தபின்னரே ஞானஸ்நானம் எடுக்க எவரும் தகுதியாகிறார்கள். மாற்கு 16:16.

அதன் பின்னரே இரட்சிப்பு.. இந்த இரட்சிப்பை முடிவு பரியந்தம் பற்றிக்கொள்ளவேண்டும். இல்லாவிடில் இழக்கவும் நேரிடும். அப். 2:38, 47, மாற்கு 13:13, எபி. 3:14, 6:12

எபேசியர் 4:5ல் சொல்லப்பட்டது போல, நம் அனைவருக்கும் கட்டளையாகக் கொடுக்கப்பட்ட ஞானஸ்நானம் என்பது ”பாவமன்னிப்பிற்கென்ற ஞானஸ்நானம்”

ஆகவே, சத்தியத்தை அறிந்து பாவமன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளவும்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக