#1089 – *சனகெரிப் சங்கம் என்றால் என்ன*?
*பதில்* : எகிப்திலிருந்து புறப்பட்ட அத்தனை ஏராளமான ஜனங்களுக்கும் வேண்டிய எந்தக் காரியமானாலும் மோசே ஒருவராய் நின்று ஜனங்களை நியாயந்தீர்த்துக்கொண்டு சகல பாரத்தையும் தாங்கி நிற்பதை சுலபமாக்கும்படியாக தேவன், மோசேக்கு எழுபது மூப்பர்களை ஏற்படுத்தச் சொல்லி எண். 11:16-17ம் வசனங்களில் கூறப்பட்ட ஆலோசனையை அடிப்படையாகக் கொண்டு, யூதர்கள் *சனகெரிப் சங்கம்* என்ற ஒரு அமைப்பை தங்களுக்கு தாங்களே அமைத்துக்கொண்டார்கள்.
அந்நியரிடம் சிறைப்படிருந்த யூதர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பிய பின்னர் ஆலய கட்டுமானப்பணியின் துவங்கிய காலத்திலிருந்தே இந்த சனகெரிப் சங்கத்தின் துவக்கம் எனலாம் (எஸ்ரா 5: 5, 9; 6: 7).
தேசத்தின் மூப்பர்களைக் கொண்டு இந்த சங்கம் உருவானதாக அங்கீகரிக்கப்படாத புத்தகமான மக்காபீஸில் குறிப்பிடப்பட்ட ஒரு தகவல். இந்த நேரத்தில்தான் பிரதான ஆசாரியன் என்பவன், அந்த சங்கத்தின் தலைமை அதிகாரியாக ஆனார் என்றும் அந்த புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது.
ஆரம்பகால இவ்வகை நீதிமன்றங்கள் பெரும்பாலும் இஸ்ரவேலில் உள்ள பழைய குடும்பங்களின் உறுப்பினர்களால் நியமனம் செய்யப்பட்டு தங்கள் பதவியைப் பெற்ற ஆசாரியர்களால் ஆனதாகத் தெரிகிறது.
சுமார் 76 கி.மு.வில் பரிசேயர்களுக்கும் வேதபாரகர்களுக்கும் இவ்வகை நீதிமன்றத்தில் இடங்கள் கிடைக்கும்படி இது மாறியது. ஏரோதுவின் கீழ், பழைய பிரபுக்கள் தங்கள் செல்வாக்கை இழந்தனர், நியமனங்கள் பரிசேயர்களுக்கு சாதகமாகத் தொடங்கின.
இயேசுவின் காலத்தில், சனகெரிப் நீதிமன்றம் பிரதான ஆசாரியராகவும், பிரதான ஆசாரியரைத் தேர்ந்தெடுத்த குடும்பங்களின் உறுப்பினர்களாகவும், பழங்குடியினரின் பெரியவர்களாகவும், குறிப்பிடத்தக்க குடும்பங்களாகவும், குறிப்பிடத்தக்க சட்ட வல்லுநர்களாகவும் இருந்தது.
சனகெரிப் சங்கத்தில் ஒரு காலியிடம் தோன்றியபோது, சங்கத்தின் தற்போதைய உறுப்பினராக இருப்பவர்கள் மூன்று பேர் மாற்றாக முன்மொழிய முடியும். ஆனால் அவை எவ்வளவு சிறப்பாக பின்பற்றப்பட்டன என்பது தெரியவில்லை.
தகுதிகள் என்பது "கடவுளுக்குப் பயப்படுதல், சத்திய மனிதர்கள், பேராசையை வெறுப்பது போன்றவையை அடிப்படையாக கொண்டிருந்தன.
அவர்கள் இஸ்ரவேல் மக்களை நியாயபிரமாணத்தின்படி நியாயந்தீர்பார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வசனங்களின் அடிப்படையில் அவர்கள் தேர்வு இருந்தது எனலாம்.
யாத். 18:21-22 ஜனங்கள் எல்லாருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் ஏற்படுத்தும். அவர்கள் எப்பொழுதும் ஜனங்களை நியாயம் விசாரித்து, பெரிய காரியங்கள் யாவையும் உம்மிடத்தில் கொண்டுவரட்டும், சிறிய காரியங்கள் யாவையும் தாங்களே தீர்க்கட்டும்; இப்படி அவர்கள் உம்மோடேகூட இந்தப் பாரத்தைச் சுமந்தால், உமக்கு இலகுவாயிருக்கும்.
உபா. 1:13 நான் உங்களுக்கு அதிபதிகளை ஏற்படுத்தும்பொருட்டு, உங்கள் கோத்திரங்களில் ஞானமும் விவேகமும் அறிவும் உள்ளவர்கள் என்று பேர்பெற்ற மனிதரைத் தெரிந்துகொள்ளுங்கள் என்று சொன்னேன்.
உபா. 17:9 லேவியரான ஆசாரியரிடத்திலும் அந்நாட்களில் இருக்கிற நியாயாதிபதியினிடத்திலும் விசாரிக்கவேண்டும்; நியாயம் இன்னதென்று அவர்கள் உனக்கு அறிவிப்பார்கள்.
இந்த சனகெரிப் சங்கம், தமிழாக்கத்தில் ஆலோசனை சங்கம் என்றுள்ளது. அப்.23:1, 22:30.
இயேசு கிறிஸ்துவிற்கு தீர்ப்பை வழங்கிய முறையில், மத்தேயு 16:21ன்படி இந்த ஆலோசனை சங்கம் என்ற சனகெரிப் மூன்று கட்டமைப்புகளைக் கொண்டுள்ளதாக காணமுடியும்.
மத். 16:21 அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.
யூத வரலாற்று ஆதாரங்களின்படி;
எழுபத்தொரு (71) உறுப்பினர்களைக் கொண்டுள்ளதாக அறியமுடிகிறது.
*எழுபத்தொரு உறுப்பினர்களைக்கொண்டு மூன்று அமைப்பாக பிரிக்கப்பட்டனர்*.
1-பிரதான ஆசாரியரின் குழு
மதகோட்பாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறவர்கள்.
இதில் இருபத்தி மூன்று உறுப்பினர்கள் இருந்தனர்.
2-வேதபாரகர்களின் குழு
இலக்கியம் மற்றும் சட்டத்திட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறவர்கள்.
இதில் இருபத்தி மூன்று உறுப்பினர்கள் இருந்தனர்.
3-மூப்பர்களின் குழு
எபிரேய தேசத்தின் பாரம்பரியத்தை பிரதிநிதிப்படுத்துபவர்கள்.
இதிலும் இருபத்தி மூன்று உறுப்பினர்கள் இருந்தனர்.
*தீர்மானங்கள்*
விடுவிக்கப்படுவதற்கு ஒரு வாக்கின் பெரும்பான்மை போதுமானதாக இருந்தது. அதுபோலவே, கண்டனத்திற்கு இரண்டு வாக்குகள் பெரும்பான்மை அவசியம்.
இந்த சனகெரிப் சங்கம் அல்லது ஆலோசனை சங்கம் என்பது ஒரு தேசிய பாராளுமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் அனைத்து அதிகாரங்களையும் பண்புகளையும் கொண்டிருந்தது. இது ஏதென்ஸில் உள்ள அரியோபகஸுக்கும் ரோமில் செனட்டிற்கும் இணையாக இருந்தது.
இந்த எபிரேய நீதிமன்றங்கள் என்றழைக்கப்படுபவை (ஹீப்ரு ட்ரிபுனல்கள்) மூன்று வகையானவை:
*1. பெரிய சனகெரிப்*
அ-கிராண்ட் கவுன்சில்
ஆ-இது எருசலேமில் அமர்ந்தது
இ-உயர்நீதிமன்றம் மற்றும் யூதர்களின் உச்ச நீதிமன்றம்.
ஈ-இது 71 உறுப்பினர்களைக் கொண்டது.
இதன் அதிகாரங்கள்:
1. சட்டபூர்வம்
2. செயல்வடிவம் கொடுப்பது
3. நீதித்துறை
*2. நடுத்தர சபை (Minor Sanhederin)*
*3. கீழ் சபை (Lower Sanhederin)*
இம்மூன்று குழுவில் இருந்து தலா 23 உறுப்பினர்கள் (69) மற்றும் 2 தலைமை அதிகாரிகள், மொத்த எண்ணிக்கையை 71 ஆகக் கொண்டு வந்தனர்.
(தகவல் எடுத்த ஆதாரங்கள் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய வேலைக்காரன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
----*----*----*----*----*
ஆதாரங்கள்:
1-http://www.jewishvirtuallibrary.org/jsource/Talmud/sanhedrin1.html
2-http://www.jewishvirtuallibrary.org/jsource/Talmud/sanhedrin4.html
வெள்ளி, 2 ஏப்ரல், 2021
#1089 – சனகெரிப் சங்கம் என்றால் என்ன?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக